19ஜிபி ரேமுடன் Oppo A97 5G போன் அறிமுகம்!

Oppo A97 5G Price: சீன நிறுவனமான ஒப்போ, தனது புதிய ஒப்போ ஏ97 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. போன் பல சக்திவாய்ந்த அம்சங்களுடன் வருகிறது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் போன்ற பல அம்சங்கள் உள்ளன.

புதிய ஒப்போ 5ஜி போனின் சிறப்பம்சங்கள் என்னவென்றால், இதில் கொடுக்கப்பட்டுள்ள 19ஜிபி வரையிலான ரேம் மெமரி அம்சம் தான். இந்த போன் தற்போது சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போனின் விலை ரூ.25,000-க்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Nothing Phone 1 அறிமுக சலுகைகள் இதுதான் – ஆனா, ஒரு முக்கியமான விஷயம் இருக்காது!

இதன் இந்திய வெளியீடு குறித்து நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும், விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் போனின் அம்சங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

ஒப்போ ஏ97 5ஜி அம்சங்கள் – Oppo A97 5G Specifications

டிஸ்ப்ளே:
போன் 6.6 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே, 90Hz ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1080×2020 பிக்சல்கள் கொண்டதாக இருக்கிறது. டிஸ்ப்ளே செயற்கை நுண்ணறிவால் (AI) இயங்கும், Smart Eye பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது.

சிப்செட்:
இது மீடியாடெக் டைமென்சிட்டி 810 ஆக்டா கோர் புராசஸரை கொண்டு இயங்குகிறது

ரேம், சேமிப்பு:
இதில் 12ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் மெமரி இருக்கும். நீங்கள் ரேமை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் 19 ஜிபி வரை விரிவாக்கலாம்.

போட்டி போட்டு வாட்ஸை ஏத்தும் செல்போன் நிறுவனங்கள் – Infinix Zero Ultra 180W சார்ஜிங் உடன் வருதாம்!

கேமரா:
போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் இரட்டை பின்புற கேமரா கொண்ட அமைப்புள்ளது. முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இணைப்பு:
வைஃபை, 5ஜி, யுஎஸ்பி டைப்-சி, ப்ளூடூத் போன்ற அம்சங்கள் இதில் உள்ளது. பாதுகாப்பிற்காக கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் அம்சம் நிறுவப்பட்டுள்ளது. செல்போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் DIRAC தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பேட்டரி:
இது 33 வாட் ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடன் சக்திவாய்ந்த 5000mAh பேட்டரியுடன் வருகிறது.

Xiaomi ஸ்மார்ட் ஃபேன்… இந்த மின்விசிறி கொஞ்சம் வேற மாதிரி!

ஒப்போ ஏ97 5ஜி விலை – Oppo A97 Price in India

போனின் 12ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை 1999 சீன யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23,600) ஆக உள்ளது. புதிய Oppo A97 5G ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் ஆகிய இரு நிறத் தேர்வுகளில் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.