விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது பாக்கிய லட்சுமி சீரியல் . இதன் புரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில் கோபியை பார்த்து பாக்யா கேள்விகள் கேட்டு வெளுத்து வாங்குகிறார்.
மலையாளத்தில் தற்போது ஒலிபரப்பாகி கொண்டு இருக்கும் குடும்பவிளக்கு என்ற சீரியலின் தமிழ் ரீமேக் தான் பாக்கிய லட்சுமி. இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிப்பவரின் நடிப்புதான் சுப்பர் என்று பேச்சு நிலவியது. அவரின் கதாபாத்திரத்தை வைத்து நக்கல் செய்தும், விஜய் டிவில் காமெடி ஷோவில் வீடியோ வெளியானது. மலையாளத்தைவிட தமிழ் ரீமேக்கு அதிக பார்வையாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் மனைவியை ஒதுக்கி தள்ளிவிட்டு வேறு பெண்ணுடன் உறவில் இருக்கும் கோபியை பாக்கிய கண்டுபிடித்துவிடுகிறார். அப்போது பாக்கிய கேற்கும் கேள்விகள்தான் தற்போது புரோமோவில் வெளியாகி உள்ளது. அம்மாவின் பிறந்தநாளுக்கு, அவங்க வரும்போது எப்படியெல்லாம் நடித்தீர்கள் என்று பாக்கியா கேள்வி எழுப்புகிறார். தங்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ள உடல்நிலை சரியாகவில்லை என்று கோபி நடித்ததாகவும் அவர் கேள்வி எழுப்பினார். பாக்கியாவின் நடிப்பு கோபியைவிட மிஞ்சும் அளவிற்கு இருக்கிறது.