கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரும் ஜூலை 15 முதல் அடுத்த 75 நாட்கள் வரை இலவச கோவிட்-19 பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இன்று புதிதான சுமார் 16 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கொரோனா விழிப்புணவு மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசிடம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது தொடர்ந்து இந்தியா முழுவதும் தடுப்பூசி முகாம் அமைத்து மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதுவரை இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 199.21 கோடியை தாண்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஜூலை 15, ந்தேதி முதல், அடுத்த 75 நாட்களுக்கு, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்கள் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, ”என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இலவச கோவிட் பூஸ்டர் டோஸ் அனைத்து அரசு மையங்களிலும் கிடைக்கும், என்றும் கூறியள்ளார். இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசியின் வேகத்தை விரைவுபடுத்துவதற்கும், அதன் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கும் அரசு உறுதியாக உள்ளது.
ஜனவரி 16, 2021 அன்று நாடு தழுவிய கோவிட்-19 தடுப்பூசி தொடங்கியது. மேலும் தடுப்பூசியின் உலகளாவியமயமாக்கலின் புதிய கட்டம் ஜூன் 21 முதல் தொடங்கியது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தடுப்பூசிகள் கிடைப்பது முன்கூட்டியே தெரிவது போன்றவற்றின் மூலம் தடுப்பூசி இயக்கம் அதிகரித்துள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“