சென்னை: அதிமுக துணைப்பொதுச் செயலாளர்களாக கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பழனிசாமி வகித்து வந்த தலைமை நிலையச் செயலாளர் பதவி எஸ்.பி. வேலுமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து பொன்னையன் விடுவிக்கப்பட்டு எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரக நியமிக்கப்பட்டுள்ளார்.