அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தொடக்க பள்ளியில் 19 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவ இடத்தை போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கடந்த மே மாதம் உவால்டே நகரில் உள்ள தொடக்க பள்ளியில் துப்பாக்கியுடன் நுழந்தை இளைஞன் 19 குழந்தைகள் உள்பட 21 பேரை சுட்டுக் கொன்றான்.
இந்நிலையில், அந்த கொடூர இளைஞன் பள்ளிக்குள் நுழைந்தது, போலீசார் பள்ளியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை உள்ளூர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.