இந்தியாவின் ஜூன் மாத சில்லறை பணவீக்கம் 7.01 சதவீதம் அளவீட்டைத் தொட்ட நிலையில் கச்சா எண்ணெய் விலை சரிவால் நுகர்வோர் பங்குகள் உயர்ந்து காலை பங்குச்சந்தை வர்த்தகம் உயர்வுடன் துவங்கியது. ஆனால் மாலை வர்த்தகம் முடியும் போது அமெரிக்காவின் ஜூன் மாத பணவீக்க தரவுகள் எதிரொலியாகச் சரிவுடன் முடிந்தது.
அனைத்து தரப்பினரும் கணிதப்படியே அமெரிக்காவின் ஜூன் மாத பணவீக்கம் மே மாதத்தைக் காட்டிலும் அதிகமாக அதிகரித்துள்ளது.
WFH-ல் தாராளம் காட்டும் நிறுவனங்கள்.. ஊழியர்களுக்கு செக்.. என்ன நடக்கிறது..!
அமெரிக்கப் பணவீக்கம்
புதன்கிழமை வெளியான பணவீக்க தரவுகள் அடிப்படையில் ஜூன் 2022ல் அமெரிக்காவின் ரீடைல் பணவீக்கம் 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்கப் பங்குச்சந்தையில் 3 முக்கியக் குறியீடான எஸ்&பி 500, டாவ் ஜோன்ஸ், நாஸ்டாக் ஆகிய மூன்றும் சரிவைச் சந்தித்துள்ளது.
நுகர்வோர் பணவீக்கம்
மே மாதம் அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்கம் 1 சதவீதம் உயர்ந்த நிலையில், ஜூன் மாதம் 1.3 சதவீதம் அதிகரித்து 9.1 சதவீதம் என்ற மோசமான நிலையை அமெரிக்கா அடைந்துள்ளதாக அமெரிக்காவின் தொழிலாளர் புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
1980
அமெரிக்க வரலாற்றில் அதிகப்படியான பணவீக்கத்தை எட்டியுள்ளது இந்த ஜூன் மாதம் தான், 1980 ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் பணவீக்கம் 9 சதவீதத்தைத் தொட்டது. அதன் பின்பு இப்போது தான் 9 சதவீத அளவீட்டை தாண்டி 9.1 சதவீத அளவீட்டை தொட்டு அமெரிக்க அரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
எனர்ஜி பணவீக்கம்
இந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் எனர்ஜி பணவீக்கம் 7.5 சதவீதமாகவும், பெட்ரோல் (Gasoline) பணவீக்கம் 11.2 சதவீதமாகவும், உணவு பணவீக்கம் 1.0 சதவீதமாகவும். இதேபோல் அனைத்து சேவை மற்றும் உற்பத்தி பொருட்கள் மீதான பணவீக்கமும் அதிகரித்து ஜூன் மாதம் 9.1 சதவீத அளவீட்டை எட்டியுள்ளது.
பென்ச்மார்க் வட்டி
அமெரிக்காவின் மத்திய வங்கி பல முறை தனது பென்ச்மார்க் வட்டியை உயர்த்தியும் பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் நிற்கிறது. இதனால் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் வட்டியைக் கட்டாயம் உயர்த்தும், ஆனால் இதேவேளையில் கச்சா எண்ணெய் விலை மள மளவெனக் குறைந்து வரும் நிலையில் காத்திருந்து முடிவை எடுக்கலாம்.
கச்சா எண்ணெய் விலை
புதன்கிழமை வர்த்தகத்தில் WTI கச்சா எண்ணெய் விலை 95.33 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 98.68 டாலராகவும் குறைந்துள்ளது. இது பணவீக்க பாதிப்பைக் குறைக்க அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலக நாடுகள் அனைத்திற்கும் பயன்படும். இந்தச் சூழ்நிலையில் தான் அமெரிக்காவின் வட்டி உயர்வுக்கா இந்திய முதலீட்டாளர்கள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்திய முதலீட்டாளர்கள்
அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தினால் இந்திய பங்குச்சந்தையில் இருந்து அதிகப்படியான முதலீடுகள் வெளியேறும் இதனால் ஒட்டுமொத்த பங்குச்சந்தையும் சரிந்து ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
டாலர் இன்டெக்ஸ்
அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் இன்று 108.59 வரையில் உயர்ந்து அக்டோபர் 2002 அளவீட்டை தொட்டு உள்ளது. பணவீக்க தரவுகள் வெளியாவதற்கு முன்பு இதன் அளவு 107.9 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாணய மதிப்பு
மேலும் அமெரிக்க டாலருக்கு எதிராக யூரோ மதிப்பு 1 ல் இருந்து குறைந்து 0.9998 ஆகச் சரிந்துள்ளது. இதேபோல் இந்திய ரூபாய் மதிப்பு 79.65 ஆகவும், இலங்கை ரூபாய் மதிப்பு 357.55 ஆகவும், பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 210.87 ஆகவும் உள்ளது.
அமெரிக்காவில் இருந்தாலும் என் ஊரு திருநெல்வேலி தான்.. 1000 பேருக்கு ஐடி வேலை..!
USA June inflation hits 41 years high; gasoline and food inflation weights more in Retail inflation
USA June inflation hits 41 years high; gasoline and food inflation weights more in Retail inflation அமெரிக்கப் பணவீக்கம் 41 வருட உச்சம்.. பைடன் முடிவு என்ன.. காத்திருக்கும் இந்திய முதலீட்டாளர்கள்..!