பெங்களூரு : பல ஆண்டுகளுக்கு பின், அர்க்காவதி லே — அவுட்டுக்கு, குடிநீர், சாக்கடை கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர, பி.டி.ஏ., முடிவு செய்துள்ளது.பெங்களூரில், அர்க்காவதி லே — அவுட் அமைக்க, 2003 செப்டம்பரில் பி.டி.ஏ., அறிவிப்பு வெளியிட்டது.
நிலம் கையகப்படுத்த உத்தரவிட்டது. இதன்படி 3,893 ஏக்கர் விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஜக்கூர், சம்பிகேஹள்ளி, தனிசந்திரா, நாகவாரா, ராச்சேனஹள்ளி உட்பட 16 கிராமங்களின் நிலத்தில், அர்க்காவதி லே — அவுட் அமைக்கப்பட்டது.இதில் 22 ஆயிரம் வீட்டுமனைகள் வழங்க, பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர அபிவிருத்தி ஆணையம் திட்டமிட்டது. இதுவரை 8,500 வீட்டுமனைகள் அளிக்கப்பட்டுள்ளன. நிலம் கையகப்படுத்துவதில், விவாதம் ஏற்பட்டதால் 1,300 வீட்டுமனைதாரர்களுக்கு, கெம்பேகவுடா லே — அவுட்டில், மாற்று வீட்டுமனைகள் வழங்கப்பட்டன.
அர்க்காவதி லே — அவுட்டில், குடிநீர், சாக்கடை கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், இங்கு வீடு கட்ட முடியாமல், மனை உரிமையாளர்கள் அவதிப்பட்டனர்.இதுபோன்ற அடிப்படை வசதிகளை செய்ய, பி.டி.ஏ., முடிவு செய்துள்ளது. இதற்காக பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியத்துக்கு, பி.டி.ஏ., 490 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இப்பணிகளை பி.டி.ஏ., சார்பிலேயே செய்திருந்தால், 80 கோடி ரூபாய் மிச்சமாகியிருக்கும் என, கூறப்படுகிறது.’எது, எப்படியோ, அர்க்காவதி லே — அவுட்டில், அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் போதும்’ என, மனை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement