அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புப் புதன்கிழமை காலை வர்த்தகத்தில் 79.61 ஆகச் சரிந்த நிலையில் அடுத்த சில நாட்களில் 80 ரூபாயைத் தொடரும் என்ற அச்சம் உள்ளது.
இதற்கு ஏற்றார் போல் இன்று அமெரிக்கா தனது பணவீக்க தரவுகளை வெளியிடும் நிலையில், விரைவில் அமெரிக்காவின் பெடரல் ரிசரவ் பணவீக்கத்தைக் குறைக்க வட்டியை உயர்த்த அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
இந்தியாவின் பிசியான விமான பாதை எது தெரியுமா? சென்னைக்கு எந்த இடம்?
81 ஐ தொடுமா..
அமெரிக்காவின் வட்டி உயர்த்தப்பட்டால் கட்டாயம் இந்திய சந்தையில் இருக்கும் முதலீடுகள் வெளியேற வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது, இதனால் 80 ஐ நெருங்கிய ரூபாய் மதிப்பு 81 ஐ தொடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2.86 லட்சம் கோடி ரூபாய் சேமிப்பு
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆர்பிஐ அறிவித்த ஒரு முக்கியமான திட்டம் மூலம் இந்தியாவுக்குச் சுமார் 36 பில்லியன் டாலர் அதாவது 2.86 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகை சேமிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி
இந்தியாவில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் டாலரில் செய்யப்படும் காரணத்தால் டாலருக்கான டிமாண்ட் அதிகரித்த இதன் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பொருட்களின் விலைவாசியும் அதிகரிக்கும்.
அமெரிக்கா
அமெரிக்கா காலம் காலமாகத் தனது நாணய கொள்கையை அதிகப்படியான தளர்வுகளுடன் வைத்திருந்து டாலர் வாயிலான வர்த்தகத்தை ஊக்குவித்து வந்த வேளையில் தற்போது பணவீக்கம் அதிகரித்த காரணத்தால் வேக வேகமாகப் பென்ச்மார்க் வட்டியை அதிகரித்து டாலர் ஆதிக்கம் பெற்றுள்ளது.
ரஷ்யா, ஈரான்
இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்கவும் ரூபாய் வாயிலான பேமெண்ட்-ஐ ஏற்க ரஷ்யா, ஈரான் போன்ற பல நாடுகள் இருக்கும் காரணத்தாலும் ஆர்பிஐ இந்தியாவில் புதிதாக ரூபாய் வாயிலாகப் பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவும், இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ரூபாய் மதிப்பில் பொருட்களை ஏற்றுமதி செய்யும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
ரூபாய் செட்டில்மென்ட் முறை
இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் அளித்து உலகளாவிய வர்த்தகத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், இந்திய நாணயத்தில் வர்த்தகத்தை ஆதரிப்பதற்காகச் சர்வதேச வர்த்தகத்திற்கான ரூபாய் செட்டில்மென்ட் முறையை அறிமுகம் செய்தது.
இந்தியா ரஷ்யா வர்த்தகம்
இந்தப் புதிய முறையின் கீழ், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் சிறப்பு வொஸ்ட்ரோ (Vostro) கணக்கைப் பயன்படுத்தி ரசீதுகள் மற்றும் பணம் செலுத்துவதை ரூபாய் வாயிலாகச் செய்ய முடியும். இப்புதிய வர்த்தக முறை மூலம் இந்தியா ரஷ்யா உடன் உடனடியாக ரூபாய் வாயிலாக வர்த்தகம் செய்யத் துவங்க முடியும்.
வொஸ்ட்ரோ கணக்குக் கட்டமைப்பு
இந்தப் புதிய சிறப்பு வொஸ்ட்ரோ (Vostro) கணக்குக் கட்டமைப்பு மூலம் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் குறிப்பாகக் கச்சா எண்ணெய், தங்கம், ராணுவ ஆயுதங்கள் போன்றவற்றை இனி டாலர், யூரோ போன்ற வெளிநாட்டு நாணயங்களில் செலுத்தாமல் இந்திய ரூபாயில் செலுத்தலாம். இதேபோல் இந்தக் கட்டமைப்பை அனுமதிக்கும் வெளிநாடுகளும் டாலர் இல்லாமல் இந்திய ரூபாயில் பொருட்களை வாங்கலாம்.
36 பில்லியன் டாலர்
ரூபாய் வாயிலாகத் தற்போது ரஷ்யா, ஈரான், இலங்கையுடன் வர்த்தகம் செய்ய முடியும், அடுத்தச் சில மாதத்தில் ஐக்கிய அரபு நாடுகள், சவுதி, சீனாவும் இப்பட்டியலில் சேர வாய்ப்பு உள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்தியா – ரஷ்யா மத்தியிலான வர்த்தகம் ஒரு மாதத்திற்குச் சராசரியாக 3 பில்லியன் டாலராக இருந்தால், வருடத்திற்குச் சுமார் 36 பில்லியன் டாலர்.
இந்தியாவின் ஏற்றுமதி
இந்த 36 பில்லியன் டாலருக்கான டாலர் இருப்பை இந்தியா சேமிக்க முடியும், இதேவேளையில் இந்திய சந்தையில் குவியும் அன்னிய முதலீடுகள் மூலம் ரூபாய் மதிப்பும் உயரத் துவங்கும், இது எப்படிப் பார்த்தாலும் இந்தியாவுக்குப் பெரிய லாபத்தை அளிக்கும். இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் வேகமாக வளர்ந்து வரும் வேளையில் ஆர்பிஐ அறிவித்துள்ள இத்திட்டம் இந்தியாவுக்கு ஜாக்பாட் தான்..
RBI new Rupee settlement may save 36 billion dollar in hard currency
RBI new Rupee settlement may save 36 billion dollar in hard currency ஆர்பிஐ ஒற்றை அறிவிப்பால் 36 பில்லியன் டாலர் சேமிப்பு.. ரஷ்யா, ஈரான், இலங்கை உடன் டீல்..!