டெல்லி: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 நாட்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மத்திய இணைஅமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்து உள்ளார். இது வரும் 15ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் ஏறி இறங்கி காணப்படும் நிலையில், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், 2டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என மத்தியஅரசு வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், நாட்டின் 75வது சுதந்திர தினம் ஆகஸ்டு 15ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு மத்தியஅரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 75 நாட்களுக்க இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து உள்ளத.
இதுகுறித்து அறிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகும் நிலையில் 75 நாட்களுக்கு நாடு முழுவதும் இலவச பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என கூறியுள்ளார். 15 ஜூலை 2022 முதல் அடுத்த 75 நாட்கள் வரை, 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு கோவிட் பூஸ்டர் டோஸ்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 18வயதுக்கு மேற்பட்ட 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.