இந்தியாவில் தினசரி கோவிட் பரவல் சற்று அதிகரிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பரவல் சற்று அதிகரித்துள்ளது. நேற்று 13,265 பேருக்கு கோவிட் உறுதியான நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 16,906 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,906 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,36,69,850 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 15,447பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,30,11,874 ஆனது.

latest tamil news

தற்போது 1,32,457 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக 45 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,25,519 ஆக உயர்ந்தது.

latest tamil news

இந்தியாவில் இதுவரை 199.12 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 11,15,068 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.