உலகின் 40 நாடுகளில் உபர் டாக்சி தனது சேவையை செய்து வரும் நிலையில் அவற்றில் எட்டு நாடுகளில் உள்ள மக்கள் உபர் சேவையை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்ற புள்ளிவிவரம் தற்போது வெளிவந்துள்ளது.
உபர் டாக்சியை அதிகம் பயன்ப டுத்தும் எட்டு நாடுகள் எவை என்பதை தற்போது பார்ப்போம்.
அது மட்டுமின்றி இந்த எட்டு நாடுகளில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதையும் பார்ப்போம்.
இந்த 10 வேலைகளில் ஒன்றை பெற்று விட்டீர்களா? உங்கள் வாழ்க்கை செட்டில்தான்!
ஜெர்மனி
ஸ்டேடிஸ்டா என்ற அமைப்பின் உலகளாவிய நுகர்வோர் கணக்கெடுப்பில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின்படி, ஜெர்மனியில் 3 சதவீதம் பேர் மார்ச் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை உபர் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.
பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டில் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி 10 சதவீதம் பேர் மார்ச் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை உபர் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.
ஸ்பெயின்
ஸ்பெயின் நாட்டில் கடந்த 12 மாதங்களில் 14 சதவீதம் பேர் உபர் சேவையை பயன்படுத்தியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காவில், கணக்கெடுக்கப்பட்ட தகவலின்படி 18 சதவீதம் பேர் கடந்த 12 மாதங்களில் உபர் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.
பிரிட்டன்
பிரிட்டன் நாட்டில் மார்ச் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை 22 சதவீத மக்கள் உபர் டாக்சி சேவையை பயன்படுத்தி உள்ளனர்.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் கணக்கெடுக்கப்பட்ட மக்களில் 29 சதவீதம் பேர் மார்ச் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை உபர் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.
இந்தியா
இந்தியாவில் கணக்கெடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி 42 சதவீதம் பேர் மார்ச் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை உபர் சேவையை பயன்படுத்தினர்.
பிரேசில்
பிரேசிலில் கணக்கெடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி 43 சதவீதம் பேர் மார்ச் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை உபர் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.
இந்தியாவுக்கு 2வது இடம்
மொத்த புள்ளிவிவரங்களின்படி உலகில் மிக அதிகமாக பிரேசில் நாட்டின் உபர் சேவையை பயன்படுத்தி உள்ளனர் என்பதும் அதற்கு அடுத்தபடியாக உபர் சேவையை பயன்படுத்திய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
Top 8 countries where Uber ride-hailing firm is most popular, See where is India?
Top 8 countries where ride-hailing firm is most popular, See where is India? | இந்த 8 நாடுகளில் உபர் டாக்சி சேவை அதிகம்: இந்தியாவுக்கு எந்த இடம்?