உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் தற்போது இந்தியர்களும் பலர் இடம்பெற்று வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
அந்த பணக்காரர்கள் இந்திய அளவில் எந்த இடத்தில் உள்ளனர் என்பதையும் பார்ப்போம்.
இந்த 8 நாடுகளில் உபர் டாக்சி சேவை அதிகம்: இந்தியாவுக்கு எந்த இடம்?
அதானி
கௌதம் அதானி மற்றும் குடும்பத்தினர் $114.4 பில்லியன் சொத்து மதிப்புடன் உலக தரவரிசையில் 5வது இடத்தைப் பிடித்துள்ளனர். சமீபத்தில் டெலிகாம் பிரிவில் நுழைவதாக அறிவித்த கெளதம் அதானி மற்றும் குடும்பத்தினர் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர் மற்றும் உலகின் 5வது பணக்காரர்களாக உள்ளனர்.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி 88.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக தரவரிசையில் 10வது இடத்தில் உள்ளார். எண்ணெய், தொலைத்தொடர்பு, சில்லறை வர்த்தகம் மற்றும் பிற பிரிவுகளில் ஆர்வமுள்ள முகேஷ் அம்பானி, தற்போது இந்தியாவின் 2வது பணக்காரர் மற்றும் உலகில் 10வது இடத்தில் உள்ளார்.
ஷிவ் நாடார்
ஷிவ் நாடார் $22.3 பில்லியன் சொத்து மதிப்புடன் உலக தரவரிசையில் 63வது இடத்தில் உள்ளார். தொழில்நுட்ப நிறுவனமான HCL நிறுவனத்தின் நிறுவனரும் தற்போதைய தலைவரான ஷிவ் நாடார் இந்தியாவின் 3 வது பணக்காரர் மற்றும் உலகின் 63 வது பணக்காரராக தரவரிசையில் உள்ளார்.
சைரஸ் பூனவல்லா
சைரஸ் பூனவல்லா $20.1 பில்லியன் சொத்து மதிப்புடன் உலக தரவரிசையில் 73வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் நிறுவனரான சைரஸ் பூனாவல்லா, இந்தியாவின் 4வது பணக்காரர் மற்றும் உலக அளவில் 73வது நபராக உள்ளார்.
ராதாகிஷன் தமானி
ராதாகிஷன் தமானி $17.9 பில்லியன் சொத்து மதிப்புடன் உலக தரவரிசையில் 86வது இடத்தில் உள்ளார். பிரபலமான ரீடெய்ல் நிறுவனமான DMart நிறுவனத்தின் நிறுவனர் ராதாகிஷன் தமானி, இந்தியாவின் 5 வது பணக்காரர் மற்றும் உலகின் 86 வது பணக்காரராக தரவரிசையில் உள்ளார்.
ஆக்ஷ்மி மிட்டல்
ஆக்ஷ்மி மிட்டல் $14.2 பில்லியன் சொத்து மதிப்புடன் உலக தரவரிசையில் 125வது இடத்தில் உள்ளார். ஆர்சிலர் மிட்டலின் தலைவரான லக்ஷ்மி மிட்டல், நாட்டின் 6வது பணக்காரராகவும், உலகின் 125வது பணக்காரராகவும் இடம்பிடித்துள்ளார்.
திலீப் ஷாங்வி
திலீப் ஷாங்வி 14.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக தரவரிசையில் 126வது இடத்தில் உள்ளார். சன் பார்மாவின் நிறுவனர் திலீப் ஷங்வி, இந்தியாவின் 7வது பணக்காரர் மற்றும் உலகின் 126வது பணக்காரராக இடம் பிடித்துள்ளார்.
சாவித்ரி ஜிண்டால்
சாவித்ரி ஜிண்டால் மற்றும் அவரது குடும்பத்தின் $13.9 பில்லியன் சொத்து மதிப்புடன் உலக தரவரிசையில் 128வது இடத்தில் உள்ளார். ஜிண்டால் குழுமத்திற்குப் பின்னால் இருக்கும் சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர் இந்தியாவில் 8வது பணக்காரர் மற்றும் உலகின் 128வது பணக்காரர்கள் ஆவார்கள்.
உதய் கோடக்
உதய் கோடக் $13.5 பில்லியன் சொத்து மதிப்புடன் உலக தரவரிசையில் 131வது இடத்தில் உள்ளார். கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநரான உதய் கோடக், நாட்டின் 9வது பணக்காரராகவும், உலகின் 131வது பணக்காரராகவும் உள்ளார்.
குமார் மங்கலம் பிர்லா
குமார் மங்கலம் பிர்லா $13.1 பில்லியன் சொத்து மதிப்புடன் உலக தரவரிசையில் 138வது இடத்தில் உள்ளார். ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லா, இந்தியாவின் 10வது பணக்காரராகவும், உலகின் 138வது பணக்காரராகவும் இடம்பிடித்துள்ளார்.
Here are top 10 richest Indians and where they stand in the world!
Here are top 10 richest Indians and where they stand in the world! | உலக பணக்காரர் பட்டியலில் இந்தியர்கள் யார் யார் தெரியுமா? அம்பானி, அதானிக்கு எந்த இடம்?