வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க் : இந்தாண்டு நவ.15ல் உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.ஐ.நா. உலக மக்கள் தொகை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போது உலக மக்கள் தொகை 794 கோடியாக உள்ளது. இது வரும் நவ.15ல் 800 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நாளில் துல்லியமாக எட்டும் என உறுதியாக கூற முடியாது. வரும் 2030ல் உலக மக்கள் தொகை 970 கோடியை எட்டும். இது 2080ல் 1040 கோடியாக உயரும். 2100ம் ஆண்டு வரை மக்கள் தொகையில் மாற்றம் இருக்காது.
உலகளவில் 2050ம் ஆண்டு வரை மக்கள் தொகை அதிகரிப்பில் எட்டு நாடுகள் 50 சதவீத பங்கை வழங்கும். இதன்படி இந்தியா, பாக்., காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய நாடுகள் மக்கள் தொகை அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2050ல் இந்தியா, சீனா ஆகிய நாடுகளை அடுத்து அமெரிக்கா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கும். நான்காவது இடத்தில் நைஜீரியா இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த இடங்களில் பாக்., இந்தோனேஷியா, பிரேசில், காங்கோ, எத்தியோப்பியா, வங்கதேசம் ஆகியவை இடம் பெறும் என தெரிகிறது.
இந்தாண்டு மக்கள் தொகையில் 9 மற்றும் 10வது இடத்தல் உள்ள ரஷ்யா, மெக்சிகோ நாடுகள் 2050ல் பின்னுக்கு தள்ளப்பட்டு விடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement