எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா – சீனா ராணுவ உயர்அதிகாரிகள் இடையே வருகிற 17 ஆம் தேதி 16வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்திய ராணுவம் தரப்பில் கமாண்டர் லென்டினன்ட் ஜெனரல் சென்குப்தா பங்கேற்க இருக்கிறார். இதில், கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே எஞ்சியுள்ள சில இடங்களில் இருந்து படைகளை விலக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட இருக்கிறது.
இதுவரை 15 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் முழுமையாக படைகளை விலக்குவது குறித்து முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.