தங்கம் விலையானது இந்தியாவில் இரண்டு மாத சரிவில் காணப்படுகிறது. இது பணவீக்கம் எதிர்பார்ப்பினை விட சற்று குறைவாகவே இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. இது தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது
தங்கம் விலையானது இந்த மாதத்தின் தொடக்கத்தில் 10 கிராமுக்கு 52,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 50,206 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்டது. இது உச்சத்தில் இருந்து கிட்டதட்ட 2000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது.
நடப்பு மாத தொடக்கத்தில் இந்திய அரசானது தங்கத்தின் மீதான இறக்குமதி வரி விகிதத்தினை அதிகரித்த நிலையில், இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று ஏற்றம் கண்டு காணப்பட்டது.
இந்திய ஐடி ஊழியர்களுக்கு போட்டியாக அமெரிக்கர்கள்.. எப்படி தெரியுமா?
வரி + ஜிஎஸ்டி வரி
இந்தியாவினை பொறுத்தவரையில் இறக்குமதி வரியுடன் சேர்த்து, ஜிஎஸ்டியும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இது தங்கம் விலையினை இன்னும் அதிகரிக்கும் விதமாக காணப்படுகின்றது. அதோடு இந்திய ரூபாயின் மதிப்பும் தங்கம் விலையினை ஊக்குவிக்கும் விதமாகவே இருந்து வருகின்றது.
காஸ்ட்லியான தங்கம்: முதலீடு சரிவு
அமெரிக்கா பத்திர சந்தையும், டாலரின் மதிப்பும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகிறது டாலர் இன்டெக்ஸ் 20 வருட உச்சமான 108.170 ஆக உயர்ந்துள்ளது. இது மற்ற நாணயதாரர்களுக்கு தங்கத்தினை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. இதன் காரணமாக தங்கத்தில் முதலீடுகள் குறைந்துள்ளன. இது தங்கம் விலையில் அழுத்ததினை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவு வட்டி அதிகரிக்கலாம்?
அமெரிக்காவின் மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் 100 அடிப்படை புள்ளிகள் ஆவது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.
எப்படியிருப்பினும் தங்கம் விலையானது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படுகிறது. ஆக அதுவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது.
பணவீக்கம் உச்சம்
இன்று வெளியான அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடானது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில் 9.1% அதிகரித்தும், கடந்த முந்தைய மாதத்தோடு ஒப்பிடும்போடு 1.3% அதிகரித்தும் காணப்படுகிறது. இது ஏற்கனவே பணவீக்கமானது உச்சத்தில் உள்ள நிலையில், மீண்டும் உச்சம் எட்டியுள்ளது. இது கட்டாயம் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவனமுடன் வர்த்தகம் செய்யலாம்
எப்படியிருப்பினும் கடந்த 5 அமர்வுகளாக தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகின்றது. குறிப்பாக டாலரின் மதிப்பானது உச்சம் தொட்டு வரும் நிலையில் சரிவில் காணப்படுகின்றது. ஆக இது குறைந்த விலையில் வாங்க சரியான இடமாக பார்க்கப்பட்டாலும், தொடந்து வட்டி விகிதம் அதிகரித்தால் அது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக முதலீட்டாளர்கள் சற்று கவனமுடன் வர்த்தகம் செய்யலாம்.
gold prices fall nearly Rs.2000 in a week
gold prices fall nearly Rs.2000 in a week/ஒரே வாரத்தில் கிட்டதட்ட ரூ.2000 வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. வாங்க சரியான நேரமா?