ஓப்போ நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் அந்த நிறுவனம் நாலாயிரத்து 389 கோடி ரூபாய் அளவுக்குச் சுங்கவரி ஏய்த்துள்ளதாக வருவாய்ப் புலனாய்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஓப்போ நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களிலும், அதிகாரிகளின் வீடுகளிலும் வருவாய்ப் புலனாய்வு இயக்கக அதிகாரிகள் திடீர்ச் சோதனை நடத்தினர்.
இதில் ஓப்போ நிறுவனம் தவறான அறிக்கை அளித்து 2981 கோடி ரூபாய் சுங்கவரி விலக்குப் பயன் அடைந்துள்ளதும், 1408 கோடி ரூபாய் வரி ஏய்த்துள்ளதும் தெரியவந்துள்ளதாக வருவாய்ப் புலனாய்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.