மதுரையில் தமிழக கல்வி கட்டமைப்பை உருவாக்கியவர் காமராஜர். தொழிற்சாலைகள் உருவாக்கியவர். சென்னை ஐஐடியை உருவாக்கியவர் இவரே. காமராஜரை நினைவு கூறுவதில் பெருமை கொள்கிறேன் என்று ஆளுநர் ரவி பேசியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 54வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ரவி பேசினார். அனைவருக்கும் வணக்கம் என உரையை துவக்கிய ஆளுநர், உங்களுக்கும் உங்களது நண்பர்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைகிறது. உங்களின் கடுமையான உறுதியாலும் முயற்சியாலும் கிடைத்த பட்டம் இது. உங்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ’’காமராஜர் சிறந்த தேசியவாதி. கிராம பகுதியில் இருந்து வந்து பாரத் ரத்னா பெரும் அளவுக்கு உயர்ந்தவர். எல்லோருக்கும் முன்மாதிரியாக திகழ்பவர். ஜாலியன் வாலபாக் படுகொலை சம்பவத்தை பார்த்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட துவங்கினார் காமராஜர். பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்தவர்கள் ஆங்கிலேயர்கள். வட அமெரிக்காவை சிதைத்து போல இந்தியாவை சிதைக்க ஆங்கிலேய ஆதிக்கம் திட்டமிட்டபோது அவர்களால் அதை சாதிக்க முடியவில்லை. ஏனெனில் இந்தியா சீனாவை விட சமூக, பொருளாதார அளவில் மேம்பட்டு இருந்தது.
இந்தியாவில்தான் கப்பல்களை waterproof செய்வது குறித்து ஆங்கிலேயர்கள் கண்டு கொண்டனர். சோழர்களின் கப்பல் பயன்பாட்டு முறை மூலம் ஆங்கிலேயர்கள் கப்பல் கட்டுமானத்தில் முன்னேற்றம் அடைந்தனர். இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைக்க ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தார்கள். தெற்கே இருந்தவர்களை திராவிடர் என்றும் வடக்கே இருந்தவர்களை ஆரியர் என்றும் பிரித்தனர். ஆங்கிலேயர் எவ்வாறு இந்திய வரலாற்றை மாற்றினார்கள் என்பதை அனைவரும் தேடி தெரிந்துகொள்ள வேண்டும்.
தமிழக கல்வி கட்டமைப்பை உருவாக்கியவர் காமராஜர். தொழிற்சாலைகள் உருவாக்கியவர். சென்னை ஐஐடியை உருவாக்கியவர் இவரே. காமராஜரை நினைவு கூறுவதில் பெருமை கொள்கிறேன். 100வது சுதந்திர தினத்தில் உலகத்திற்கே இந்தியா தலைமயாக இருக்க வேண்டும் அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும். இன்றிருக்கும் அனைத்து கல்வி, தொழிற்சாலை கட்டமைப்புகளும் காரமராஜரால் உருவாக்கப்பட்டவை. தற்போது வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எல்லோரும் சென்ற பாதையில் செல்லாமல், புதிதாக தொழில் துவங்க முயற்சியுங்கள். புதிய இந்தியாவை இளைஞர்கள் தான் உருவாக்க வேண்டும்’’ என்று சிறப்புரை ஆற்றினார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM