ஜப்பானில் பாம்பு வடிவ ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
5.5 அடி நீளம், 10 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, உயரமான படிகளில் ஏறி, குறுகலான இடைவெளிகளில் செல்லத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோ மூலம் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் மனிதர்களை கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.