டாலர் மற்றும் மேற்கு ஆசிய நாணயங்களுக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையிலும் தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளா அதிகப்படியான லாபத்தையும், நன்மைகளையும் கொண்டு பெற்று வருகிறது.
உலகம் முழுவதிலும் உள்ள புலம்பெயர்ந்த மக்களைக் கொண்டுள்ள கேரளா, வெளிநாட்டில் வசிக்கும் மக்கள் கேரள மாநிலத்திற்குப் பணம் அனுப்புவதை அதிகரிக்கும் என்றும், வெளிநாட்டு நாணயங்கள் வாயிலாகச் செய்யப்படும் டெபாசிட்களின் வளர்ச்சி சரியும் போக்கை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நாட்டின் முன்னணி வங்கியான எஸ்பிஐ FCNR டெபாசிட், அதாவது வெளிநாட்டு நாணயங்களில் செய்யப்பட்டும் என்ஆர்ஐ டெபாசிட் திட்டத்திற்கான வட்டியை அதிகரித்துள்ளது.
கூகுள்-க்கே இந்த நிலைமையா.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் டெக் உலகமே அதிர்ந்தது..!
என்ஆர்ஐ
வெளிநாட்டிலுள்ள இந்தியர்கள், அரசுக்குத் தெரிவிக்காமல் அதாவது அனுமதி இல்லாமலேயே இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு ரூ. 10 லட்சம் ரூபாய் வரையிலான பணத்தை அனுப்ப அனுமதித்துள்ளது. மத்திய அரசின் இந்தச் சமீபத்திய அறிவிப்பு வெளிநாட்டு மக்கள் செய்யும் பண வரவை ஆதரிக்கும் மற்றொரு காரணியாக விளங்கும்.
கேரளா
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படும் மொத்த பணத்தில் 19 சதவீதம் கேரள மக்களைச் சார்ந்த உள்ளது. வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் 3.4 மில்லியன் கேரளாவைச் சேர்ந்தவர்கள் தான், இது கிட்டத்தட்ட 90 சதவீதம்.
உலக வங்கி
உலக வங்கியின் தரவுகளின்படி, 2020ல் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட பணம் 83 பில்லியன் டாலரிலிருந்து கடந்த ஆண்டு 87 பில்லியன் டாலராக அதிகரித்த போதிலும், கோவிட்-19 பரவிய பிறகு கேரளாவுக்கான வரவு, பரவலான வேலை இழப்புகள் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் திரும்பியதால் பாதிக்கப்பட்டது.
3 சதவீதம் உயர்வு
2022 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவிற்குப் பணம் அனுப்பும் அளவு 3 சதவீதம் அதிகரித்து 89.6 பில்லியன் டாலராக உயரும் என்று உலக வங்கி அறிக்கை கணித்துள்ளது. கொரோனா தொற்றுக்குப் பின்பு வெளிநாட்டுக்கு வேலைக்காகச் சென்றோர் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
ரூபாய் மதிப்புச் சரிவு
இந்திய ரூபாய் மதிப்பு புதிய சரிவைச் சந்தித்து வருவதால், கேரளாவுக்குப் பணம் அனுப்புவது உயரத் தொடங்கியுள்ளது. தற்போது பண வரவு பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்றாலும், வரவு மேலும் அதிகரிக்கலாம்.
சேட்டன், சேச்சிகள்
கூடுதலாக, கேரளாவின் வங்கிகளில் என்ஆர்ஐ டெபாசிட்களின் வளர்ச்சி குறைந்துள்ளது, வெளிநாட்டு மக்கள் பணம் அனுப்பும் பணத்தை வங்கிகளில் வைத்திருப்பதற்குப் பதிலாக அதிகமாகச் செலவிடுவதாகத் தெரிகிறது. வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் போது இந்தப் போக்கு மாறலாம்.
எனக்கே விபூதி அடிக்க பாத்தில்ல.. 20 வருடத்தில் நடக்காத ஒன்று, இப்போ நடந்துள்ளது..!
Kerala remittances starts growing after rupee historic fall; But NRI deposits fall
Kerala remittances starts growing after rupee historic fall; But NRI deposits fall கேரளாவில் குவியும் திர்ஹாம், டாலர்.. ரூபாய் சரிவை பயன்படுத்தும் சேட்டன், சேச்சிகள்..!