தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவ நிகழ்ச்சியின் போது பட்டாசு வெடித்து தீப்பொறி பட்டதில் கோவில் முன் இருந்த கூரைப்பந்தல் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.
தீ மளமளவென பற்றி எரிவதை பார்த்த பக்தர்கள் நாலாபுறமும் பதறி ஓடினர். இதனை அடுத்து அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளிய தெப்ப தேரோட்டம் நடைபெற்றது.