ராம் நகர் : ராம் நகரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த, வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.கடந்த சில மாதங்களுக்கு முன், வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, பெங்களூரில் தஞ்சமடைந்தவர்கள், போலி ஆதார் அடையாள அட்டை, ரேஷன் அட்டைகள் வாங்கி தங்கியிருந்தனர்.இந்நிலையில், மாநிலம் முழுதும் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் குறித்து, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ராம் நகரில் ஒரு பெண் உட்பட எட்டு பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அவர்களை ரகசியமாக கண்காணித்த போலீசார், நேற்று அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். இதில் ஒரு பெண், அவர்களிடமிருந்து தப்பியோடினார். விரைந்து செயல்பட்ட போலீசார், ஒரு மணி நேரத்தில் அவரையும் கைது செய்தனர்.அவர்களிடம் விசாரித்த போது, முதலில் அவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என கூறினர். அதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக மேற்கு வங்கத்திற்குள் நுழைந்த அவர்கள், தொட்டபல்லாபூர் வழியாக ராம் நகருக்கு வேலை தேடிவந்துள்ளது தெரிந்தது.அவர்களிடம், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement