சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 2வது வாரத்தில் வெளியாக வாய்ப்பு

டெல்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டங்களில் பயின்று தேர்வெழுதிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் ஆகும் என யுஜிசி தெரிவித்து உள்ளது. இதனால் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 2வது வாரம் அல்லது அதற்கு பிறகே வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படு கிறது. ஆனால்,  சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு முடிவுகள் ஜூலை இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றும், 2022 சிபிஎஸ்இ முடிவுகளில் தாமதம் ஏற்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் பிளஸ்2 தேர்வு வெளியாகி, கல்லூரிகளில் உயர்கல்விக்கான மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், சிபிஎஸ்இ இன்னும் தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை. இதனால் கல்லூரிகள் திறப்பதிலும் தாமதம் எற்பட்டு உள்ளது. இந்த நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பின் 2வது பருவ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் ஆகும் என்று  சிபிஎஸ்இ தெரிவித்துள்ளதாக யுஜிசி தெரிவித்து உள்ளது. இதனால், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 2-வது வாரத்திலோ அதற்கு பிறகோதான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக  சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. கடந்த கல்வியாண்டில் 10வது மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவத் தேர்வுகள் மூலம் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இரண்டு பருவத் தேர்வுகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் பள்ளிகள் வழங்கும் உள்ளீட்டு மதிப்பெண் போன்றவற்றை கணக்கிலெடுத்து அவற்றை கூட்டி ஒரே மதிப்பெண் பட்டியலில் வெளியிடுவது  போன்ற பல்வேறு செயல்களில் சிபிஎஸ்இ நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதனால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் மேலும் ஒரு மாதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உளளது.  இந்த தாமதத்தால்,  கல்லூரிகளில் சேர்க்கையிலும் சிபிஎஸ்இ  மாணவர்க ளுக்குச் சிக்கல் எழுந்துள்ளது.

ஏற்கனவே பலமுறை தேர்வு முடிவுகள் தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், இறுதியில்,  ஜூலை 15ந்தேதி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளி யாகும் என கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், தேர்வு முடிவு வெளியிட மேலும் ஒரு மாதம் ஆகும் என சிபிஎஸ்இ தெரிவித்து உள்ளது. இதனால், தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 2வது வாரத்துக்கு பிறகே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையுல் யுஜிசியும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை தேர்வு முடிவுகள் வெளியான பிறகே நிறுத்த வேண்டும் என அறிவித்து உள்ளது.

இந்த நிலையில்,  சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு முடிவுகள் ஜூலை இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றும், 2022 சிபிஎஸ்இ முடிவுகளில் தாமதம் ஏற்படாது என்றும் சிபிஎஸ்இ வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

சிபிஎஸ்இ-ன் நடவடிக்கையால்,  கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்குவதிலும் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. கலை அறிவியல் மற்றும் பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களும் வரப்பெற்று வருகிறது.  ஆனால், சிபிஎஸ்இ மாணவர்கள் கல்லூரி படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டாம்! யுஜிசி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.