ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி, ரஷ்யா-உக்ரைன் போருக்கு பின்பு அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க, பிரிட்டன் நாடுகளுடன் சேர்ந்து உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடுத்ததைக் கண்டித்துப் பாதுகாப்புக்காக ரஷ்யா மீது கடுமையான வர்த்தகத் தடைகளை விதித்தது.
இதேவேளையில் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைக் காட்டிலும் ஜெர்மனி தான் ரஷ்யாவுடனும், உக்ரைன் உடனும் அதிகப்படியான வர்த்தகம் செய்து வருகிறது.
உணவுப் பொருட்கள் முதல் கச்சா எண்ணெய் வரையில் ஜெர்மனி ரஷ்யாவை நம்பி தான் உள்ளது. இப்படியிருக்கும் நிலையில் தான் ஐெர்மனி மக்கள் சுடு தண்ணீர் கூட வாங்க முடியாத நிலை விரைவில் வரக் கூடிய சூழ்நிலை உள்ளது.
கூகுள்-க்கே இந்த நிலைமையா.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் டெக் உலகமே அதிர்ந்தது..!
ஜெர்மனி
உலக நாடுகளைப் பணவீக்கம் மற்றும் விலைவாசி வாடிவதைத்து வரும் நிலையில் ஜெர்மனி போன்ற முன்னணி பொருளாதார நாட்டில் சுடு தண்ணீர் கூட ஆடம்பரமான ஒன்றாக மாறப்போகும் சூழ்நிலை உருவாகியிருப்பது அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.
ஹாம்பர்க்
ஜெர்மனி நாட்டின் துறைமுக நகரமான ஹாம்பர்க், ஏற்கனவே மக்களுக்கு நாட்டின் எரிபொருள் பற்றாக்குறை மிகவும் அதிகமாகியுள்ள நிலையில் வெந்நீர் இனி அளந்து அளந்து தான் கொடுக்க முடியும் என முன்கூட்டியே எச்சரித்துள்ளது. இந்த மோசமான நிலைக்குக் காரணம் ரஷ்யா என்பது தான் தற்போது முக்கியமான விஷயம்.
நோர்ட் ஸ்ட்ரீம் 1 பைப்லைன்
நோர்ட் ஸ்ட்ரீம் 1, ஐரோப்பாவின் முக்கிய எரிவாயு குழாய், ஐரோப்பா ஏற்கனவே பற்றாக்குறையில் தத்தளிக்கும் நேரத்தில் பராமரிப்புக்காக 10 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. 2022 ஜூலை 11 முதல் 21 வரை, நார்ட் ஸ்ட்ரீம் ஏஜி வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக அதன் எரிவாயு குழாய் அமைப்பின் இரண்டு வழிகளையும் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.
பராமரிப்புப் பணிகள்
நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 ஆகியவை பால்டிக் கடல் வழியாகச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய்கள் ஆகும், அவை ஐரோப்பாவில் எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யும் முக்கியமான பைப்லைன். தற்போது ஜெர்மனி நாட்டின் பெரிய கவலை என்னவென்றால், ஜூலை 21க்குப் பிறகும், Nord Stream 1 முழுத் திறனில் இயங்காமல் போகலாம் என்பது தான், அது மட்டும் நடந்தால் ஜெர்மனிக்கு பெரும் பாதிப்பு தான்.
ஜெர்மனி பொருளாதாரம்
இது மக்களை மட்டும் அல்லாமல் ஜெர்மனி நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் உற்பத்தித் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட உள்ளது. ஜெர்மனி நாட்டின் மத்திய வங்கி நடப்பு ஆண்டுக்கான பொருளாதாரம் வளர்ச்சியை 4.2 சதவீதத்தில் இருந்து 1.9 சதவீதமாகச் சரிந்துள்ளது.
கேஸ்பியன் பைப்லைன்
ஐரோப்பிய நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் கேஸ்பியன் பைப்லைன்-ஐ 30 நாள் மூடுவதற்கு ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் ரஷ்யா உத்தரவைப் பயன்படுத்திக் கச்சா எண்ணெய்யை ஆயுதமாகக் கொண்டு ஜெர்மனி உட்படப் பல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கத் திட்டமிட்டு வருகிறது.
ரஷ்யா
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் வர்த்தகம், நிதி, போக்குவரத்து தடைகளை ஆயுதமாகப் பயன்படுத்திச் சர்வதேச சந்தையில் ரஷ்யாவை ஒதுக்கி வைத்த நிலையில், ரஷ்யா தற்போது அனைத்து நாடுகளையும் தனது கச்சா எண்ணெய் வளம் மற்றும் உணவு பொருட்கள் விநியோகம் மூலம் தாக்கி வருகிறது.
30 நாள் மூடல்
ரஷ்யா கேஸ்பியன் பைப்லைன்-ஐ 30 நாள் மூடுவது உறுதி செய்யப்படாத நிலையிலேயே ஜெர்மனியின் நிலை ஆட்டம் கண்டு உள்ளது. இந்தக் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஜெர்மனி நாட்டின் மக்களைப் பணியில் தவித்து வரும் வேளையில் கூடுதலாகப் பாதிக்க உள்ளது.
WFH-ல் தாராளம் காட்டும் நிறுவனங்கள்.. ஊழியர்களுக்கு செக்.. என்ன நடக்கிறது..!
In Germany warm water will be luxury soon, Likely Slip Into Recession
In Germany warm water will be luxury soon, Likely Slip Into Recession சுடுதண்ணி கூட வாங்க முடியாத மக்கள்.. ஜெர்மனி-க்கு இப்படியொரு நிலைமையா..?!