திருப்பூர் வடக்கு காவல் நிலையம் எதிரே நிறுத்திவைக்கப்பட்ட சைக்கிளை நோட்டமிட்டு, நைசாக திருடி மர்ம நபர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் குமரன் சாலை சர்ச் லைன் பகுதியில் குடியிருந்து வருபவர் டேவிட். 75 வயதான இவர், காலை வழக்கம் போல் சைக்கிளில் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் வீட்டின் வெளியே தனது சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றவர், மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது சைக்கிள் காணாமல் போனது தெரிய வந்தது.
இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் குடியிருப்பு பகுதிக்குள் வந்ததும், நேக்காக நோட்டமிட்டு யாரும் இல்லாத சமயத்தில் சைக்கிளை திருடி சென்றதும் தெரிய வந்தது. திருப்பூர் வடக்கு காவல் நிலையம் எதிரிலேயே, அதுவும் ஏழு மீட்டர் தொலைவில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவமானது, அப்பகுதி குடியிருப்பு பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM