டோலோ 650 மாத்திரை தயாரிப்பு நிறுவனம் டாக்டர்களுக்கு ரூ.1000 கோடிக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியது வருமான வரித்துறை சோதனையில் அம்பலம்

டெல்லி: டோலோ 650 மாத்திரை தயாரிப்பு நிறுவனம் டாக்டர்களுக்கு ரூ.1000 கோடிக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியது தெரியவந்துள்ளது. 9 மாநிலங்களில் 36 இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் ரூ.1.2 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.1.4 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகளையும் வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா காலகட்டத்தில் குறிப்பாக 2020-21 காலகட்டத்தில் மருத்துவ துறையில் பல்வேறு நிறுவனங்கள் வருமான வரி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தொடந்து புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் ஏற்கனவே ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் ஏகப்பட்ட ஸ்கேன்களை பரிசோதனை மேற்கொண்டு அதற்க்கு முறையாக கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரி சோதனையும் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக டோலோ 650 என்ற மாத்திரைகளை பெரும்பாலான பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மருத்துவர் பரிந்துறை இல்லாமலும், பரிந்துறையுடனும் பயன்படுத்தியுள்ளனர். இந்த டோலோ 650 மாத்திரையை அதிக அளவில் மக்கள் பயன்படுத்துகிறார்கள் என தெரிந்துகொண்ட தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு அதனை விற்பனை செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து கடந்த 6-ம் தேதியில் இருந்து தொடர்ந்து 4 நாட்களாக இது தொடர்பாக விமிசிஸிளி லிகிஙிஷி எனப்படும் டோலோ 650 தயாரிப்பு நிறுவனத்தில் அதிரடியாக சோதனை நடைபெற்றது. இந்தியாவில் 9 மாநிலங்களில் 36 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை சோதனை செய்து பார்க்கும் போது தங்கள் நிறுவனத்தை சேர்ந்த கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை விற்ற்பனை செய்வதற்காக மருத்துவர்களுக்கும், மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கும் பரிசுப்பொருட்கள்  வழங்கும் பொருட்டு சுமார் ரூ.1000 கோடி அளவில் இந்த நிறுவனம் செலவு செய்துள்ளது வருமானவரித்துறையினர் சோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.