மும்பை பங்குச்சந்தை தடுமாறி வந்த நிலையில் புதன்கிழமை கச்சா எண்ணெய் விலை சரிவு, ரீடைல் பணவீக்க தரவுகள் ஆகியவற்றின் எதிரொலியாக கன்ஸ்யூமர் நிறுவன பங்குகள் உயர்வின் வாயிலாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் உயர்வுடன் துவங்கியது.
கச்சா மற்றும் சமையல் எண்ணெய் விலைகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக, மே மாதத்தில் 7.04% ஆக இருந்த இந்தியாவின் சில்லறை பணவீக்கம், ஜூன் மாதத்தில் வருடாந்திர அடிப்படையில் 7.01% ஆகக் குறைந்துள்ளது.
தொடர்ந்து ஆறாவது மாதமாக ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்கான 2 முதல் 6 சதவீதத்திற்கு மேல் உள்ளது. இன்னும் ஒரு காலாண்டிற்கு 6 சதவீதத்திற்கு மேல் இருந்தால் அதற்கான காரணங்களை ரிசர்வ் வங்கி கடிதம் எழுதி அரசுக்கு விளக்க வேண்டும்.
இதேவேளையில் நேற்று காலாண்டு முடிவுகளை வெளியிட்ட ஹெச்சிஎல் நிறுவனத்தின் பங்குகள் 2.3 சதவீதம் சரிந்துள்ளது.
Sensex nifty live updates 13 july 2022: hcl tech mindtree rupee covid crude gold Cpi inflation data
தடுமாறும் மும்பை பங்குச்சந்தை.. 47 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..! Sensex nifty live updates 13 july 2022: hcl tech mindtree rupee covid crude gold Cpi inflation data