தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் மதிப்புடையதாக மாற்ற வேண்டும் என்று முக ஸ்டாலின் தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில் உற்பத்தி, சேவை, லாஜிஸ்டிக்ஸ், ரியல் எஸ்டேட், பின் டெக் எனப் பல துறை சார்ந்த நிறுவனங்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒரு நாளில் மட்டும் சுமார் 60 புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
இந்த 60 ஒப்பந்தங்கள் மூலம் 1.25 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. மேலும் இந்த முதலீட்டின் வாயிலாக 74,898 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அமெரிக்கச் சுற்றுப்பயணத்தில் பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்தார்.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திணறும் இந்திய பொருளாதாரம்.. தமிழ்நாட்டின் நிலைமை என்ன தெரியுமா..?
டெகியான் (Tekion)
அமெரிக்காவின் ஆட்டோமொபைல் துறையில் தற்போது ஹாட்டான நிறுவனமாகக் கருதப்படும் டெகியான் (Tekion)-னின் நிறுவனரும், சிஇஓ-வும் தமிழருமான ஜே விஜயன் அவர்களை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில் டெக்கியான் நிறுவனம் தமிழ்நாட்டில் விரிவாக்கம் அடைவது குறித்தும், இந்தியாவின் முதன்மையான டெக் ஹப் ஆகத் தமிழ்நாட்டை மாற்றுவதற்காக எடுக்க வேண்டிய முயற்சிகளை ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது.
ஆர்க்கிள்
தமிழ்நாட்டு அரசின் முதலீடு ஈர்க்கும் மற்றும் ஒற்றைச் சாலரம் பிரிவின் நோடல் ஏஜென்சியான Guidance Tamilnadu அமைப்பு ஆர்க்கிள் டேட்டாபேஸ்-ன் ப்ராடெக்ட் மேனேஜ்மென்ட் பிரிவின் துணை தலைவாரன பேட்ரிக் வீலர் உடன் தமிழ்நாட்டின் இருக்கும் வர்த்தக வாய்ப்புகள் மற்றும் ஆரக்கிள் நிறுவனம் தமிழ்நாட்டில் விரிவாக்கம் குறித்து ஆலோசனை செய்தனர்.
ஜூம் நிறுவனம்
மேலும் தமிழ்நாட்டின் இருக்கும் வர்த்தக வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டில் விரிவாக்கம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு, ஜூம் நிறுவனத்தின் ப்ராடெக் மற்றும் இன்ஜினியரிங் பிரிவு தலைவர் வேல்ச்சாமி சங்கர்லிங்கம் அவர்களைச் சந்தித்துள்ளனர்.
தங்கம் தென்னரசு
இதேபோல் அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு கூட்டணி முயற்சிகள் குறித்துப் பிராட்காம் குளோபல் சிஇஓ அதிகாரியான
ஆண்டி நல்லப்பன் அவர்களைச் சந்தித்து ஆலோசனை செய்தார்.
சிவப்புக் கம்பளம்
தமிழ்நாடு அரசு ஒருபக்கம் இந்தியாவில் பிற மாநிலங்களில் இருக்கும் நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்ய அழைத்து வரும் வேளையில் அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் பல நிறுவனங்களையும், தலைவர்களையும் நேரடியாகச் சந்தித்துத் தமிழகத்தில் வர்த்தகத்தையும், அலுவலகங்களையும் விரிவாக்கம் செய்ய அழைப்பு விடுத்து வருகிறது.
மனோ தங்கராஜ்
இதேவேளையில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் RMZ மில்லினியாவில் AT & T நிறுவனத்தின் புதிய டெவலப்மென்ட் சென்டரை திறந்து வைத்தார். இது இந்தியாவில் AT & T நிறுவனத்தின் இன் இரண்டாவது சென்டராகும்.
தமிழ்நாடு அரசு
முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பின் இதுவரை சுமார் 192 நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 2.20 லட்சம் கோடி ரூபாய் என முதல்வர் முக ஸ்டாலின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசினார்.
Tamilnadu Minister Thangam Thennarasu, met Tekion to oracle officals; Red Carpet for US companies
Tamilnadu Minister Thangam Thennarasu, met Tekion to oracle officals; Red Carpet for US companies தமிழ்நாட்டில் அமெரிக்க நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் வரவேற்பு.. டெகியான் டூ ஆரக்கிள்..!