தவறான ஊசியால் சிறுமிக்கு பக்கவிளைவு – 22 ஆண்டுகளுக்கு பின் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு

கடந்த 2000 ஆம் ஆண்டில் தவறான ஊசி செலுத்தியதால் பக்க விளைவுகளை சந்தித்த சிறுமிக்கு 22 ஆண்டுகள் கழித்து இழப்பீடு வழங்குவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
கடந்த 24.8.2000 ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த எழிலரசி என்ற சிறுமிக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்காக மருத்துவர் அசோக் குமார் என்பவர் ஊசி செலுத்தி உள்ளார். இதனால் அந்தப் பெண்ணுக்கு நரம்பு பாதிப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை விசாரித்த மாநில ஆணையம், மருத்துவரின் தவறான சிகிச்சை முறையை கண்டறிந்ததோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.
இதை எதிர்த்து மருத்துவர் தாக்கல் செய்த மனுவை தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு 6% வட்டியுடன் 4 லட்ச ரூபாய் இழப்பீட்டை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவித்திருந்தது.
image
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மருத்துவர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த சூரிய காந்த், ரவிகுமார் அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீதிபதிகள் மருத்துவ நிபுணர்கள் அல்ல; ஆனால் மருத்துவ நிபுணர்கள் வழங்கி இருக்கக்கூடிய அறிக்கைகளின்படி மருத்துவர் கவனக் குறைவுடன் இருந்திருக்கிறார் என்பது உறுதியாகிறது. எனவே மனுவை தள்ளுபடி செய்வதாகவும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.