இலங்கை நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்களிடம் இருந்து பாதுகாக்குமாறு அந்த நாட்டின் இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட தாங்க முடியாத பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் பதவி விலக வேண்டும் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டம் கடந்த ஜூலை 9ம் திகதி தீவிரமடைந்ததை தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ இல்லம் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது, அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
Protestors forcibly enter the Prime Minister’s office at Flower Road, Colombo#SriLankan #SriLankanpoliticalcrisis #lka #SriLanka pic.twitter.com/BAizfwIuSC
— Chathuranga Hapuarachchi (@ChathurangaHapu) July 13, 2022
இந்தநிலையில் இலங்கையின் நாடாளுமன்றத்தில் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள், நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர்.
இதையடுத்து இலங்கையின் பாதுகாப்பு படையின் தளபதிகள், இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், அனைத்து கட்சி தலைவர்களிடம் நாடாளுமன்றத்தை பாதுகாக்க உத்தரவு கோரினர்.
ஆனால் அதற்கு அனைத்து கட்சி தலைவர்கள் எந்தவொரு விரிவான பதிலும் தராத நிலையில், இதற்கான உத்தரவினை இலங்கை அரசாங்கத்திடமே விவாதித்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
Chief of Defence Staff General Shavendra Silva requests all citizens to give their support to armed forces & police to maintain the law & order in the country. #DailyMirror #SriLanka #SLnews pic.twitter.com/POzKlyPeEP
— DailyMirror (@Dailymirror_SL) July 13, 2022
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்களிடம் இருந்து, பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கையின் தற்போதைய மற்றும் இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு படை தளபதிகளுக்கு உத்திரவினை பிறப்பித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: பாஸ்தா சாப்பிட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: விசம் வைத்து விட்டதாக தந்தை புகார்!
இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும், இலங்கையின் பாதுகாப்பு படையினருக்கும் இடையே எற்பட்ட மோதலில் பலர் படுகாயம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.