Nothing Phone 1 Flipkart: உலகளவில் உள்ள ஸ்மார்ட்போன் பயனர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது நத்திங் போன் 1. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. ரூ.29,999 என்ற தொடக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நத்திங் போனுக்கு, கூடுதல் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்னாப்டிராகன் 778+ புராசஸர், சிறந்த இரண்டு 50 மெகாபிக்சல் கேமரா, வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் என போனில் பல அம்சங்கள் நிறைந்துள்ளன. அந்த வகையில் போனுக்கு வழங்கப்படும் சலுகைள், அதன் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகக் காணலாம்.
நத்திங் போன் 1 சலுகை விலை – Nothing Phone 1 Offer Price
நத்திங் நிறுவனத்தின் முதல் போனான நத்திங் போன் (1) கருப்பு, வெள்ளை என இரு நிறத் தேர்வுகளில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் இந்த போன் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
முற்றிலும் உள்நாட்டிலேயே, அதுவும் தமிழ்நாட்டில் இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளது. Nothing phone (1) ரூ.29,999 விலையில் 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டையும், ரூ.32,999-க்கு 8/256ஜிபி வேரியண்டையும், ரூ.35,999 விலையில் 12/256ஜிபி வேரியண்டையும் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.2000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. HDFC வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், போனுடன் Nothing Ear (1) வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
நத்திங் போன் 1 சிறப்பம்சங்கள் – Nothing Phone 1 Specifications
பெயர்நத்திங் போன் 1அளவு159 x 76 x 8.3 மில்லிமீட்டர்இயங்குதளம்ஆண்ட்ராய்டு 12 (நத்திங் ஓஎஸ்)புராசஸர்குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி+ 5ஜி புராசஸர்திரை6.55” அங்குல முழுஅளவு எச்டி+ தொடுதிரை, 120Hz ஹெர்ட்ஸ் ரிப்ரஷ் ரேட், HDR 10+தெளிவுதிறன்1080*2400 பிக்சல்கள்பின்புற கேமரா50 மெகாபிக்சல் f/1.8 முதன்மை சென்சார் (Sony IMX766) OIS, EIS + 50 மெகாபிக்சல் f/2.2 கேமரா (சாம்சங் JN1 சென்சார்)முன்புற கேமரா16 மெகாபிக்சல் செல்பி (Sony IMX471 சென்சார்)ஸ்லாட்இரண்டு 5ஜி நானே சிம்ரேம்8ஜிபி, 12ஜிபிஸ்டோரேஜ்128ஜிபி / 256ஜிபிஆதரவுவைஃபை 6 (5GHz), ப்ளூடூத் 5.2, டைப்-சி, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஜாக்சென்சார்அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, கைரேகை, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப், NFCஇடங்காட்டிஜிபிஎஸ், BEIDOU, GLONASS, GALILEO, QZSSபேட்டரி4500mAh / 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுநிறங்கள்கருப்பு, வெள்ளைஎடை194 கிராம்விலை8+128ஜிபி – ரூ.29,999 | 8+256ஜிபி – ரூ.32,999 | 12+256ஜிபி – ரூ.35,999