பஸ் கட்டணம் ரூ.20.. இல்லாத ஓலா, உபருக்கு ரூ.300 கட்டணம்.. நீங்க என்ன சொல்றீங்க!

ஓலா, உபர் டாக்சி, ஆட்டோ சேவை பற்றி பலரும் அறிந்திருந்திருக்கலாம். கட்டணம் சாதாரண ஆட்டோ, டாக்ஸிகளுடன் ஒப்பிடும்போது குறைவு தான். ஆன்லைன் ஆப் மூலம் பதிவு செய்யப்பட்டு இருந்த இடத்தில் இருந்தே பயணிக்க மிக பயனுள்ளதாக இருக்கும் எனலாம்.

ஆனால் சில சமயங்களில் இதுவே கடுப்பேற்றலாம், நாம் அவசரமாக செல்ல வேண்டும் என நினைப்போம். அதற்காக ஓலாவோ, உபர் டாக்ஸி புக் செய்ய நினைக்கலாம்.

3 பக்கமும் அடிவாங்கும் கிரிப்டோகரன்சி.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

பேருந்து கட்டணத்துடன் ஒப்பிடும்போது,இதில் பல மடங்கு கட்டணமும் வசூலிக்கலாம். ஆனால் அப்போதும் கூட வாகனங்கள் கிடைக்காது. இதனால் நேரம் வீண் ஆனது தான் மிச்சமாக இருக்கும். சில சமயங்களில் புக் செய்து கேன்சல் ஆகிவிடும்.

எவ்வளவு கட்டணம்?

எவ்வளவு கட்டணம்?

அப்படி தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவித்தினை தான் ட்விட்டர் பயனர் ஒரு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். குறிப்பாக சென்னை, பெங்களூரு போன்ற மெட்ரோ இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கலாம். இது குறித்து அவரது ட்வீட்டில் பெங்களுரு சிவாஜி நகரில் இருந்து ஜெய நகருக்கு பயணம் செய்த 20 டிக்கெட்டினையும், இதனுடம் ஓலா, உபரில் சென்றால் எவ்வளவு கட்டணம் வரலாம் என்பதையும் ஒப்பிட்டுள்ளார்.

 

கட்டணம்  அதிகமிருந்தாலும் கார் இல்லை

கட்டணம் அதிகமிருந்தாலும் கார் இல்லை

இதில் பயரின் விவாதம் கட்டணம் அல்ல, இது குறித்து பயனர் தனது ட்வீட்டில் நான் கொஞ்சம் அவசரமாக இருந்ததால், 15 மடங்கு அதிக கட்டணமும் செலுத்த தயாராக இருந்தேன். ஆனால் எனக்கு அப்போதும் கூட வாகனம் கிடைக்கவில்லை. அதன் பிறகு அழகான 13 வருகின்றது @BMTC_BENGALURU. நான் ஜெயா நகருக்கு 20 ரூபாய் கட்டணத்தில் செல்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

என்ன தான் வழி?
 

என்ன தான் வழி?

இதற்கிடையில் தான் அவர் சிவாஜி நகரில் இருந்து, ஜெயா நகருக்கு வாங்கிய 20 ரூபாய் டிக்கெட்டினையும், ஓலா உபரினையும் பதிவிட்டுள்ளார். உண்மையில் சில சமயங்களில் கட்டணமே அதிகம் கொடுக்க தயாராக இருந்தாலும், வாடகை வாகனங்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கதான் செய்கிறது. ஆக என்றுமே நிலையாக இருக்கும் பேருந்துகளுக்கு முன் கூட்டியே செல்வதே இதற்காக ஒரே முடிவாக இருக்கும்.

அபராதம் விதிக்கப்படனும்

அபராதம் விதிக்கப்படனும்

இது குறித்து ட்விட்டரில் பல்வேறு விவாதங்களும் நடந்து வருகின்றது. நிறுவனங்கள் பதிவு செய்த பயணத்தை ரத்து செய்யும்போது, அபராதம் விதிக்கும்போது, முன் பதிவினை ஏற்றுக் கொண்ட பிறகு ரத்து செய்வதற்கு ஒட்டுனர்களுக்கு ஏன் கட்டணம் விதிக்க கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் ஒரு பயனர்.

 எவ்வளவு நேரம் ஆகும்?

எவ்வளவு நேரம் ஆகும்?

எனினும் ஒரு உடனடி ஆய்வில், பெங்களுரில் ஒரு வண்டியை பெற 6 – 15 நிமிடங்கள் ஆகும் என 40% பேர் பதிலளித்துள்ளனர். . 30% அதிகமானோர் 16 – 30 நிமிடங்கள் ஆகலாம் என பதிவிட்டுள்ளனர்.

மற்றொரு பயனர் அந்த இடத்தில் பேருந்து சரியாக கிடைப்பதில்லை. சரியாக வருவதில்லை. கால் டாக்ஸி சேவையும் சரியாக கிடைப்பதில்லை. குறிப்பாக மழை காலங்களில் மிக பரிதாபகரமானது என்றும் பதிவிட்டுள்ளார்.

 

உங்கள் கருத்து என்ன 20 ரூபாய் பேருந்து பெஸ்டா அல்லது 300 ரூபாய் கால் டாக்ஸி பெஸ்டா?

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ola uber ஓலா உபர்

English summary

Rs.20 ticket for bus trip or Rs.300 for unavailable Ola, Uber? What do you say?

Rs.20 ticket for bus trip or Rs.300 for unavailable Ola, Uber? What do you say?/பஸ் கட்டணம் ரூ.20.. இல்லாத ஓலா, உபருக்கு ரூ.300 கட்டணம்.. நீங்க என்ன சொல்றீங்க!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.