பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் செயல்பட அனைத்து அதிகாரங்களும் குழுவுக்கு வழங்கப்படும் என்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) விசேட அறிக்கையொன்றை விடுத்து இந்த விடயங்களை குறிப்பிட்டார்..