பிரித்தானிய நகரம் ஷெஷயரில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான சுரங்கத்தில் 200 ஆண்டு பழமையான ஏராளமான கைவிடப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தொல்லியல் துறையினர் பிரித்தானியாவின் ஷெஷயர் நகரில் அமைந்துள்ள ஆல்டெர்லி எட்ஜ் என்ற இடத்தில் உள்ள சுரங்கத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
கடந்த ஆண்டே இந்த சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், குறுகிய பாதைகள் மற்றும் சிக்கலான அமைப்புகளை கொண்டிருந்ததால் இதற்கு நுழைந்து ஆய்வு மேற்கொள்ள சிரமம் இருந்தது.
இந்த நிலையில் தான் நிபுணர்கள் பலரின் உதவியுடன் சுரங்கத்திற்குள் சென்ற ஆராய்ச்சியாளர்கள், அங்கிருந்த பொருட்களை பார்த்து மலைத்து நின்றனர்.
அவை அனைத்தும் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. 1810ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சுரங்கம் கைவிடப்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில் காலணிகள், களிமண் குழாய்கள், எந்திரங்களின் சிதறிய பாகங்கள் என பல பொருட்கள் கிடைத்தன.
அத்துடன் புதிரான வரைபடங்கள், WS என்ற எழுத்துக்கள் 20 ஆகத்து 1810 என்ற திகதியுடன் எழுதப்பட்டிருந்தது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
குறிப்பிட்ட ஒரு வயதான புதைபடிவத்தை மறைமுகம் மற்றும் முடி அகலம் பாதுகாக்கப்படுவதைக் கவனிப்பது மிகவும் அசாதாரணமானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.