சித்ரதுர்கா : ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத், பல்வேறு தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மடங்களின் மடாதிபதிகளுடன் சித்ரதுர்காவில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இரவு சித்ரதுர்காவுக்கு வந்தார். தலித் சமுதாய மடமான மாதாரா சென்னய்யா குருபீடத்தில் இரவில் தங்கினார்.தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மடங்களின் மடாதிபதிகளுடன் நேற்று காலை சிற்றுண்டி சாப்பிட்டார். அவர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்தார்.
பசவமூர்த்தி மாதாரா சென்னய்யா சுவாமிகள், போவி குருபீடத்தின் இம்மடி சித்தராமேஸ்வரா சுவாமிகள், பகீரதா மஹாசமஸ்தானத்தின் புருஷோத்தமானந்தபுரி சுவாமிகள், குஞ்சிடிகா மஹாசமஸ்தானத்தின் சாந்தவீர சுவாமிகள்.சலுவாதி குருபீடத்தின் பசவநாகிதேவா சுவாமிகள், மடிவாளா மாச்சிதேவா குருபீடத்தின் பசவ மாச்சிதேவா சுவாமிகள் உட்பட 20க்கும் அதிகமான மடாதிபதிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.சமீபத்தில் தான் விஜயபுராவில் இரண்டு நாட்கள் தங்கி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மடாதிபதிகளுடனான சந்திப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement