லோக்சபாவுக்கு ஒவ்வாத வார்த்தைகள் : புதிய பட்டியல் வெளியீடு| Dinamalar

புதுடில்லி :பார்லிமென்டின் இரு சபைகளிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.பார்லிமென்டின் லோக்சபா ராஜ்யசபாவில் பேசும் உறுப்பினர்கள் அவையின் மாண்புக்கு எதிரான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அதை லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர் அவைக் குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிடலாம்.


எந்தெந்த வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற புதிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பார்லிமென்ட் மழைக் கால கூட்டத் தொடர் 18ம் தேதி துவங்க உள்ளது. அதில் இருந்து இது அமலுக்கு வருகிறது.
‘அஷேம்டு’ எனப்படும் வெட்ககரமானது ‘டிராமா’ எனப்படும் நாடகமாடுகின்றனர் என்பது உள்பட பல ஆங்கில வார்த்தைகள் இதில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் பல ஹிந்தி வார்த்தைகளும் இந்தப் பட்டியலில் உள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.