இந்தியாவில் அடுத்த தலைமுறைக்கான 5ஜி தொழில்நுட்பம் வர உள்ளது என்பதும் இதற்கான ஏலம் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஏலத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் நான்கு நிறுவனங்கள் ஏலம் கேட்க விண்ணப்பித்துள்ளன.
இவற்றில் அம்பானி மற்றும் அதானியின் நிறுவனங்கள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.
பொன்னியின் செல்வன்: புத்தக விற்பனை சாதனையும் திரைப்படத்தின் வர்த்தகமும்!
ஏலத்தில் 4 நிறுவனங்கள்
அம்பானி, அதானி நிறுவனங்கள் உள்பட 4 நிறுவனங்களிடம் இருந்து 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் கேட்க விண்ணப்பங்கள் வந்துள்ளன என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து ஜூலை 26-ஆம் தேதி நடைபெறும் ஏலத்தில் வெற்றி பெறுபவர் யார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துவிட்டது.
ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா, அதானி குழுமம் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நான்கு நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5ஜி ஏலம்
இந்த நிலையில் 5ஜி ஏலம் குறித்த சில முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம். ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்த 4 நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பம் செய்த போதிலும் இந்த எண்ணிக்கை இறுதியானது அல்ல என்றும் இந்த நான்கு நிறுவனங்கள் தற்போதைக்கு ஏலம் கேட்க தகுதி பெற்றது என்று கூறப்படுகிறது. எனவே வேறு சில நிறுவனங்களும் ஏலத்தில் இணையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஜூலை 26ஆம் தேதி ஏலம்
ஜூலை 26ஆம் தேதி 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெற உள்ளதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த ஏலத்தில் 600மெகா ஹெட்ஸ், 700 மெகாஹெட்ஸ், 800,900 மெகாஹெட்ஸ், 1800 மெகாஹெட்ஸ், 2100மெகாஹெட்ஸ், 2300மெகாஹெட்ஸ், 2500மெகாஹெட்ஸ், 3300மெகாஹெட்ஸ், 26ஜிகாஹெட்ஸ் ஆகியவை ஏலம் விடப்படஉள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகள்
5ஜி பெக்டரம் ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம் வரும் 20 ஆண்டுகளுக்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 72,097 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட உள்ள நிலையில் இந்த தொழில்நுட்பத்தின் மதிப்பு ரூபாய் 4.30 லட்சம் கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முன்பணம் தேவையில்லை
5ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் கேட்கும் நிறுவனங்களை ஈர்ப்பதற்காக சில எளிதான பேமெண்ட் முறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு முன் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் முன் பணம் கட்ட வேண்டிய அவசியம் இருந்த நிலையில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம் முன் பணம் கட்டத் தேவையில்லை என முதல்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேமெண்ட்
ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம், ஏலத்தின் தொகையை 20 பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸ் போல் செலுத்திக் கொள்ளலாம். இதனால் ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம் பேமெண்ட் செலுத்துவது மிகவும் எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி
இதுவரை ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே 5ஜி ஏலம் கேட்க போட்டியில் இருந்த நிலையில் தற்போது அதானியின் நிறுவனமும் நுழைந்துள்ளதால் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பானியா? அதானியா
இதுகுறித்து தொலைத்தொடர்பு வல்லுநர்கள் கூறியபோது ஏலத்தில் வெற்றி பெறுவது அம்பானியா? அல்லது அதானியா? என்று தெரியாது. ஆனால் அதே நேரத்தில் அதானி குழுமம் புதிதாக ஏலத்தில் கலந்து கொள்ள இருப்பதால் கடும் போட்டி இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய தொலைத்தொடர்பு நிறுவனம்
அதுமட்டுமின்றி அதானி நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்றால் தொலைத்தொடர்பு சேவையில் கூடுதலாக ஒரு நிறுவனம் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்., மொத்தத்தில் ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதற்கு அதானி ஒரு முக்கிய காரணமாக உள்ளார் என கருதப்படுகிறது.
5G Spectrum auction.. Some important information
5G Spectrum auction.. Some important information | 5ஜி ஏலம் குறித்த முக்கிய அம்சங்கள்: ஏலம் எடுத்தவர் எவ்வளவு முன்தொகை கட்ட வேண்டும்?