நாட்டில் எத்தனையே முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், மக்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்படுவது தங்கம் தான். குறிப்பாக நடுத்தர மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படுவது தங்கம் தான்.
இது சிறந்த முதலீடாக மட்டும் இன்றி, அவசர காலக்கட்டத்தில் ஆபத்பாந்தவனாக உதவுகிறது.
இன்று பல குடும்பங்களில் தங்கமாக வாங்கி வைப்பதற்கு காரணமே இது தான். அவசர காலகட்டத்தில் மருத்துவ செலவா? கல்வி கட்டணமா? எதுவாயினும் தங்கத்தினை அடகு வைத்து பணம் வாங்கி செல்வதுண்டு. இதனாலேயே வட்டியில்லா முதலீடாக இருந்தாலும் அதிகம் விரும்புகின்றனர்.
சாமானிய மக்கள் ஹேப்பி.. தங்கம் விலை இன்றும் வீழ்ச்சி.. எம்புட்டு குறைசிருக்கு தெரியுமா?
தங்கம் முதலீடுகள்
இது ஒரு தரப்பினர் எனில், மற்றொரு தரப்பினர் கமாடிட்டி சந்தையிலும் தங்கம், சர்வதேச சந்தையில், தங்கம் இடிஎஃப் ஆகவும், தங்க ஃபண்டுகளாகவும் வாங்கி வைக்கின்றனர். மத்திய அரசே பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும்பொருட்டு தங்க பத்திரங்களையும் வெளியிட்டு வருகின்றது. இதன் மூலம் தங்கத்திற்கு வட்டியும் கிடைக்கிறது, பத்திரங்களை பிணையமாக கடனும் வாங்கிக் கொள்ள முடியும். மொத்தத்தில் தங்கம் அனைத்து தரப்புக்கும் ஏற்றவாறு, ஒவ்வொரு தரபினரும் ஒவ்வொரு வகையில் முதலீடு செய்து வருகின்றனர்.
9 மாத சரிவில் தங்கம்
இப்படி இந்தியர்களின் உணர்வுகளில் கலந்துள்ள தங்கத்தின் முதலீட்டினை தீர்மானிக்கும் காரணிகள் என்ன? தற்போதைய விலை நிலவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் 9 மாத சரிவில் காணப்படுகின்றது. இது தொடர்ந்து அவுன்ஸுக்கு 1800 டாலர்களுக்கு மேலாக காணப்படுகின்றது.
டாலர் ஏற்றம்
தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது ஸ்பாட் தங்கத்தின் விலையானது அவுன்ஸுக்கு 1726.27 டாலராக காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வரும் டாலரின் மதிப்பு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இது இனியும் வரவிருக்கும் அமர்வுகளில் மீண்டும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை குறையலாம்
தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இன்றும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது 1700 டாலர்களுக்கு கீழாக செல்லவும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் டாலரின் மதிப்பு, பத்திர சந்தை ஏற்றம் உள்ளிட்டவை கவனிக்க வேண்டியவையாக உள்ளன. ஒரு வேளை பணவீக்கம் என்பது மீண்டும் அதிகரித்தால் அது தங்கம் விலையினை அதிகரிக்க தூண்டலாம்.
பங்கு சந்தை & பத்திர சந்தை நிலவரம்
பங்கு சந்தையில் நிலவி வரும் ஏற்ற இறக்கத்தின் மத்தியில் முதலீடுகள் பங்கு சந்தையில் இருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றன. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை நோக்கி நகரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல பத்திர சந்தையிலும் ஏற்ற இறக்கம் அதிகரித்து வருவதால், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்னிலாக எப்படியிருக்கு?
டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது வரவிருக்கும் வாரங்களில் 1680 டாலர்களை தொடலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதுவும் தங்கம் விலை சரிய காரணமாக இருக்கலாம். எனினும் இந்திய சந்தையினை பொறுத்த வரையில் சர்வதேச சந்தையில் குறைந்தாலும், இந்திய ரூபாயின் மதிப்பால் பெரியளவில் சரியுமா? என்பது பெரும் கேள்விக்குறியாக பார்க்கப்படுகிறது.
கொரோனா அச்சம்
சீனாவில் தொடர்ந்து கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், இது மீண்டும் கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. உலகின் மிகப்பெரிய நுகர்வோரான சீனாவில் அப்படி ஏதும் நிகழ்ந்தால் அது தங்கத்தின் தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு தங்கம் விலை சரிய காரணமாக அமையலாம்.
சர்வதேச சந்தையில் தங்கம் நிலவரம்?
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1724.25 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் சற்று குறைந்து, 18.892 டாலராக காணப்படுகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே இன்னும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. குறிப்பாக டெக்னிக்கலாக குறையலாம் எனும் விதமாக காணப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?
இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு தொடக்கத்தில் பெரியளவில் மாற்றமின்றி, சற்று அதிகரித்து, 50,500 ரூபாயாக காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 76 ரூபாய் குறைந்து, 56,390 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலை இன்னும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 10 ரூபய் குறைந்து, 4660 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 37,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 5084 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40,672 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 50,840 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. இது தற்போது கிராமுக்கு 80 பைசா குறைந்து, 61.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 617 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 61,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
- 22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
- சென்னையில் இன்று – ரூ.46,600
- மும்பை – ரூ.46,700
- டெல்லி – ரூ.46,700
- பெங்களூர் – 46,740
- கோயமுத்தூர், மதுரை, என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.46,600
gold prices hits 9 month low amid soaring dollar? is it a right time to buy?
gold prices hits 9 month low amid soaring dollar? is it a right time to buy?/9 மாத சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையலாம்.. நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு!