இலங்கையிலிருந்து தப்பித்து சென்றப்பின் கோட்டாபய ராஜபக்ச மாலைதீவிலும் போராட்டங்களை எதிர்கொள்கிறார்.
இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்சவின் கொழும்பு இல்லத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை அடுத்து, புதன்கிழமை அதிகாலை அவர் தனது நாட்டை விட்டு மாலைதீவிற்கு தப்பியோடினார்.
கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் பிரத்தியேக ஓய்வு விடுதியில் தங்கியிருப்பதாக மாலைதீவின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் அங்கு சென்றதாக தகவல் வெளியான சில நிமிடங்களில் மாலைதீவிலும் சமுக வலைத்தளங்களில் #GotaGoHome ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.
கோட்டாபய ராஜபக்ச மாலைதீவுக்குத் தப்பிச் சென்றது ஏன்.., உதவியது யார்?
அதுமட்டுமின்றி, குற்றவாளியான கோட்டாபய ராஜபக்சவிற்கு அடைக்கலம் வழங்க வேண்டாம் என்று வலியுறுத்தி மாலைத்தீவிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
அங்கும், இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு மாலைதீவின் அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
“அன்புள்ள மாலத்தீவு நண்பர்களே, குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டாம் என்று உங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துங்கள்” என்று தீவுகளின் சிறிய தலைநகரில் பணிபுரியும் இலங்கையர்களால் ஒரு கருப்பு மற்றும் வெள்ளை பேனர் இருந்தது.
மாலைதீவில் இருந்து இன்று சிங்கப்பூருக்கு செல்கிறார் கோட்டாபய! உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவல்
மாலைதீவின் தலைநகரான மாலேயில் (Malé) உள்ள செயற்கைக் கடற்கரைப் பகுதியில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், சிறப்பு அதிரடிப் படையினர் போஸ்டர்களை பறிமுதல் செய்து, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, ராஜபக்ச இன்று இரவோடு இரவாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது சிங்கப்பூர் செல்வார் என்றும் மாலைதீவின் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் இராணுவ விமானத்தில் வந்ததைத் தொடர்ந்து வேலனா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ராஜபக்சே வெளியேறும்போது, மாலத்தீவின் குடிமக்கள் அவரை அவமதிக்கும் வகையில் கூச்சலிடுவதைப் போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.