NEET தேர்வு எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் மாணவர்கள் தொடர்ந்து கடுமையாக முயற்சி செய்து ஒவ்வொரு வருடமும் தேர்வு எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில் நாட்டின் முன்னணி ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் சேவை நிறுவனமான OYO இந்த வருடம் NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதிரடியான சலுகையை அறிவித்துள்ளது.
OYO-வின் இந்த அறிவிப்பு NEET தேர்வு எழுதும் பல லட்சம் மாணவர்களின் பெற்றோர்கள் மட்டும் அல்லாமல் பொது மக்களும் பாராட்டி வருகின்றனர்.
சுடுதண்ணி கூட வாங்க முடியாத மக்கள்.. ஜெர்மனி-க்கு இப்படியொரு நிலைமையா..?!
OYO அறிவிப்பு
OYO புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் NEET 2022 இல் பங்கேற்கும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு OYO ஹோட்டல் புக்கிங் சேவையில் தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. OYO அறிவிப்பில் பெண் விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு மையங்களுக்குச் செல்லும் ஊரில் இருக்கும் ஹோட்டல்களில் தங்குவதற்கு 60 சதவீதம் வரை தள்ளுபடியைப் பெறலாம் எனத் தெரிவித்துள்ளது.
NEET 2022 தேர்வு
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) ஜூலை 17 அன்று இந்தியா முழுவதும் 497 நகரங்களில் வெவ்வேறு மையங்களில் நடைபெறும். 18 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வெழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நற்பெயர்
இந்த நிலையில் ஹாஸ்பிடாலிட்டி டெக் நிறுவனமான OYO தனது வர்த்தகத்தை மேம்படுத்துவதைத் தாண்டி மக்கள் மத்தியில் விளம்பரம் அடையவும், மக்கள் மத்தியில் நற்பெயரை பெறவும் இந்த 60 சதவீதம் வரையிலான தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது.
2 நாள் ஆஃபர்
மேலும் வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏதுவாகா OYO இந்தத் தள்ளுபடி திட்டம் இரண்டு நாட்களுக்குச் செல்லுபடியாகும் வகையில் ஜூலை 16 மற்றும் ஜூலை 17, 2022 தேதிகளுக்கு அளித்துள்ளது.
புக் செய்யும் முறை
இந்தத் தள்ளுபடியைப் பெற, OYO செயலியைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு மையத்திற்கு அருகில் செல்லுபடியாகும் பங்கேற்பு ஹோட்டல் தங்குமிடத்தை (valid participating hotel) கண்டறியச் சிவப்பு நிறத்தில் இருக்கும் ‘Nearby’ ஐகானைக் கிளிக் செய்து, ‘NEETJF’ என்ற கூப்பன் குறியீட்டைத் தேர்ந்தெடுத்து, புக் நவ் மற்றும் பே அட் ஹோட்டல் பட்டனை அழுத்த வேண்டும்.
கூடுதல் வசதிகள்
இதேபோல் NEET தேர்வு எழுத ஹோட்டல் புக் செய்யும் அனைத்துப் பெண் விண்ணப்பதாரர்களுக்கும் அனைத்து ஹோட்டல்களிலும் வைஃபை மற்றும் ஏர் கண்டிஷனிங் வசதிகளைப் பெறுவார்கள் என்று OYO நிறுவனம் கூடுதல் தகவலாகத் தெரிவித்துள்ளது.
ஜெர்மனி அரசின் சூப்பர் அறிவிப்பு.. இனி நிரந்தர குடியுரிமை பெறுவது ரொம்ப ஈசி..!
OYO gives upto 60 percent discount for NEET 2022 for woman applicants; How to book room under NEETJF code
OYO announced upto 60 percent discount for NEET 2022 woman applicants; How to book room under NEETJF code | NEET மாணவர்களுக்கு OYO கொடுக்கும் சர்ப்ரைஸ்.. வேற லெவல்..!