Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
கோத்தபய ராஜபக்சே ராஜினாமா?
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, விமானப்படை விமானம் மூலம் இலங்கையை விட்டு வெளியேறி, மாலத்தீவுகளில் தஞ்சமடைந்துள்ளார். இன்று கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எலான் மஸ்க் மீது வழக்கு
ட்விட்டரை வாங்கும் முடிவை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்த நிலையில், 44 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை மீறியதாக எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்
பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் வியாழக்கிழமை முதல் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டலுக்கு வரும் 15 முதல் 19ம் தேதி வரை அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றில் இருந்து குணமடைய ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து செய்தி. பொதுமக்களுடன் தொடர்புள்ள ஆற்றல்மிகு தலைவர் நீங்கள்: ஆரோக்கியமாக விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் – ஆளுநர் ஆர்.என்.ரவி
949 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய சிவன் கோயில் மாயம் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் புகார் மனு அளித்துள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் இருந்து வெளியேறுமாறு மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் வலியுறுத்தி உள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அபேவர்தன கூறியுள்ளார்.
தகுதி தேர்வுக்கு பிறகு, வேலைவாய்ப்பு பெற மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை, டிபிஐ வளாகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்கள் நாளை முதல் மீண்டும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை முடிக்க வேண்டாம் என அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பிச் சென்றதாக தகவல் வெளியான நிலையில், கோத்தபய நாட்டை விட்டு வெளியேறியதை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வரும் 18ம் தேதி திறக்கப்படும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றக் கோரி ஈபிஎஸ், ஓ.பி.எஸ் தரப்பில் தனித்தனியாக முறையீடு செய்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு வருகிறது.
கோலப்பன் உள்பட யாரிடமும் நான் பேசவில்லை. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என் குரல் மிமிக்ரி செய்யப்பட்டுள்ளது என ஆடியோ லீக் குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் விளக்கமளித்துள்ளார்.
அதிமுக தலைவர்களை விமர்சித்து, பொன்னையன் பேசுவதாக வெளியான ஆடியோவில், என்னுடன் பேசியது பொன்னையன் தான். மிமிக்ரி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஜூலை 9ம் தேதி இரவு பொன்னையன் என்னுடன் பேசியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என அதிமுக நிர்வாகி கோலப்பன் கூறியுள்ளார்.
அதிமுக தலைவர்களை விமர்சித்து, பொன்னையன் பேசுவதாக வெளியான ஆடியோவில், என்னுடன் பேசியது பொன்னையன் தான். மிமிக்ரி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஜூலை 9ம் தேதி இரவு பொன்னையன் என்னுடன் பேசியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என அதிமுக நிர்வாகி கோலப்பன் கூறியுள்ளார்.
மாங்கனி இரைத்தல் திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்களில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு தொடர்கிறது. ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் சீற்றம் நிலவுகிறது. சூறைக்காற்றும் வீசுவதால் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.