கொரோனா தொற்று அச்சத்தால் இந்திய நிறுவனங்கள் அனைத்து ஊழியர்களுக்கும் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி கொடுத்த நிலையில், கிட்டதட்ட 3 வருடங்களாகப் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில் தற்போது இதுவே பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
சில வாரங்கள் முன்பு வரையில் இந்திய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வந்த நிலையில், தற்போது நிலைமை மொத்தமாக மாறி நிறுவனமே ஊழியர்கள் கேட்காமல் வொர்க் பர்ம் ஹோம் கொடுக்கத் துவங்கியுள்ளது.
இந்தத் திடீர் மாற்றத்திற்குப் பின்னால் முக்கியமான காரணம் இருப்பதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே தயாரான முதல் mRNA கொரோனா வைரஸ் தடுப்பூசி ஜெம்கோவாக்-19 .. விலை என்ன?
பொருளாதார ஆராய்ச்சி அமைப்பு
பொருளாதார நிபுணர்களான ஜோஸ் மரியா பாரெரோ, நிக்கோலஸ் ப்ளூம், ஸ்டீவன் ஜே. டேவிஸ், பிரென்ட் எச். மேயர் மற்றும் எமில் மிஹைலோவ் ஆகியோர் சம்பளம் மற்றும் ரிமோட் வொர்க் ஆகிய இரண்டையும் நிறுவனங்கள் எவ்வாறு அணுகுகின்றன என்பதை அமெரிக்காவின் தேசிய பொருளாதார ஆராய்ச்சி அமைப்பின் கீழ் ஆய்வு செய்தனர்.
ஆய்வு
ஏப்ரல், மே மாதம் மட்டும் அமெரிக்கச் சந்தையில் பல துறையைச் சேர்ந்த பல ஆயிரம் ஊழியர்களுக்கும் தினமும் சர்வே அனுப்பப்பட்டும், பல லட்சம் பேரின் பதில்களை வைத்து ஆய்வு செய்யப்பட்டுத் தயாரிக்கப்பட்ட ஆய்வின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
சம்பள உயர்வு நிறுத்தம்
இந்த ஆய்வில் பங்குபெற்ற 38 சதவீத நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குத் தானாக முன்வந்து வீட்டில் இருந்தும், தங்களுக்குப் பிடித்தமான இடத்தில் எங்கு வேண்டுமானாலும் இருந்து பணியாற்ற ஊழியர்களுக்கு அனுமதி அளிக்கிறது. இதேநேரத்தில் இந்த ஒரு சலுகையை அடிப்படையாக வைத்து ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அளிக்காமல் உள்ளது நிறுவனங்கள்.
குறைவான சம்பள உயர்வு
இதேபோல் பெரு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் உயர்வின் அளவு குறைந்துள்ளது என 52.4 சதவீத பேர் பதில் அளித்துள்ளனர். அதேபோல் பல நிறுவனத்தில் ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவும் வொர்க் பரம் ஹோம் கொடுக்கப்படுகிறது என்றும் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
சிறு நகரங்களுக்குப் படை எடுப்பு
இதில் சில இந்தியாவில் இருந்தாலும், பல விஷயங்கள் இன்னும் இந்தியாவில் நடக்கவில்லை, ஆனால் இது அனைத்தும் வரைவில் நம்ம ஊரிலும் நடக்கும் எனத் தெரிகிறது. இதேவேளையில் நிறுவனங்கள் பெரு நகரங்களில் இருந்து சிறு நகரங்களுக்குப் படை எடுப்பதால் இந்தச் சம்பள உயர்வு இருக்கும் பிரச்சனை இருக்காது எனவும் கூறலாம்.
வருவாய், லாபம்
அனைத்திற்கும் மேலாக நிறுவனங்களுக்குக் கூடுதலான வருவாய், கூடுதலான லாபம் கிடைக்கும் வரையில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஜூன் காலாண்டில் டிசிஎஸ், ஹெச்சிஎல் தந்தையின் லாப எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் பங்குகள் சரிந்து வருகிறது.
work from home employees might get less pay; Companies give WFH option to earn more profit
Are you happy to work from home, But things might change very soon in india. WFH employees might get less pay than People who work from office. Companies give WFH the option to earn more profit. WFH-ல் தாராளம் காட்டும் நிறுவனங்கள்.. ஊழியர்களுக்குச் செக்.. என்ன நடக்கிறது..!