ஜெய்பீம் படத்தின் மூலம் தமிழகத்தைத் தாண்டியும் கவனம் பெற்றவர் லிஜோ மோல். லிஜோவிடம் எதைப் பற்றி பேசினாலும், சட்டென மனதில் இருந்து பேசுவது அவரது ஸ்பெஷல். அவரைச் சந்தித்துப் பேசினோம்.
செங்கேணி கேரக்டர்ல இருந்து வெளியே எப்போ வந்தீங்க?
”ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஏன்னா, இருளர் மக்களோட மக்களா பழகி, அவங்கள்ல ஒருத்தராகவே வாழ்ந்துட்டேன். அந்த கேரக்டரை இப்ப நினைச்சாலும் அழுதுடுவேன். வீட்ல தனியா இருக்கறப்ப, அந்த கேரக்டரை நினைச்சாலே அழுகை தானா வந்திடும். இப்பத்தான் வெளியே வந்துகிட்டு இருக்கேன். அப்புறமா, அடுத்த படம் பண்றப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா அந்த கேரக்டர்ல இருந்து வெளியே வர முடிஞ்சது.”
சூர்யா சார் என்ன சொல்றார்?
”நான் ‘ஜெய்பீம்’ல கமிட் ஆன பிறகு இயக்குநர் ஞானவேல் சார் போன் பண்ணினார். ‘சந்துருங்கற கேரக்டருக்கு யார் நடிக்கறாங்கனு உனக்கு ஐடியா இருக்கா’ன்னு கேட்டார். பிரகாஷ்ராஜ் சார் மாதிரி ஒருத்தர் இருப்பார்னுதான் நினைச்சேன். தெரியாதுன்னு சொன்னதும், ஞானவேல் சார் ‘சூர்யா சார் நடிக்கறார். சூர்யா சார் இருக்கறார்னு தெரிஞ்சு நீங்க இதுல நடிக்க வந்துடக் கூடாதுங்கிறதாலதான் உங்ககிட்ட சொல்லாமல் விட்டுட்டேன்னு சொன்னார். ரொம்பவே சர்ப்ரைஸாகிருச்சு. ஸ்பாட்டுல அவரைப் பார்த்ததும் எனக்கு பேச்சே வரல. அவர் டயலாக் பேசிட்டு இருக்கார். நான் அப்படியே வியந்து பேச்சு வராம பார்த்துட்டு இருந்தேன். ஸ்பாட்டுல சக நடிகர்கள்மீது அவர் அக்கறையா கவனிச்சுக்கறார். அதைப் போல என் கல்யாணத்தப்போ, சூர்யா சார், ஜோதிகா மேம், பிரகாஷ்ராஜ் சார் மூணு பேரும் வாழ்த்து வீடியோ மெசேஜ் அனுப்பியிருந்தாங்க. ஞானவேல் சார் அந்த வீடியோவை ப்ளே செய்யறதுக்கு முன்னாடி அது சாதாரண வீடியோவா இருக்கும்னுதான் நினைச்சேன். சூர்யா சார் வீடியோவை நான் பார்த்துட்டு இருந்தப்ப எங்க ரியாக்ஷன்களை லைவ்வா அவரும் பார்த்துட்டு இருந்தார். நிஜமாகவே சர்ப்ரைஸ் வாழ்த்துக்கள்தான்.”
உங்க திருமணம், காதல் திருமணம்தானே…
”முப்பது வயசுலதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். வீட்டுல அம்மா, அப்பா ‘இப்பவே உனக்கு 30 வயசு ஆகிடுச்சு. சட்டுனு கல்யாணம் பண்ணிக்கோ’னு சொன்னாங்க. எனக்கும் வேறு கருத்தா எதுவும் தோணல. ஸோ, மேரேஜ் ஆகிடுச்சு.”
‘லைஃப்’ எப்படி போயிட்டு இருக்கு..? ‘அன்னப்பூரணி’யில நீங்க கணவனுக்கு அடங்கின மனைவியா நடிக்கறதா அதோட இயக்குநர் ஜோஸ்வா, விகடன் பேட்டியில சொல்லியிருந்தார்…
”ஹேப்பியா போகுது. என் கணவர் அருணும் நானும் நல்ல நண்பர்கள். அதே டைம்ல நான் காலையில எழுந்து அவருக்காக பெட்காஃபி கொடுக்கற வழக்கம் எல்லாம் கிடையாது. லேட்டாதான் எழுந்திரிப்பேன். அவருக்கு நல்லா சமைக்கத் தெரியும். பிரியாணி செம டேஸ்டா சமைப்பார். `இன்னிக்கு நீ சமையல் செய்.. நாளை நான் சமைக்கறே’ன்னு எல்லாம் சொன்னது கிடையாது. எனக்கும் சமையல் தெரியும். ஆனா, அவர் கிச்சன் பக்கம் போனால், கிச்சனையே க்ளீனா வச்சுக்க மாட்டார். சமைச்சு முடிச்சதும், கிச்சனை க்ளீன் பண்ற வேலை ரொம்பவே இருக்கும். அதுல நான் கடுப்பாகிடுவேன். ஆனாலும் நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ்.
என் முதல் படம் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ பார்த்துட்டு ‘நான் ஷார்ட் ஃபிலிம்ல நடிக்கக் கேட்டதுக்கு நடிக்க வராதுனு சொன்னேன்.. ஆனா, சினிமாவுல நடிச்சிருக்கே?’னு சொல்லி கலாய்ப்பார். ‘ஜெய்பீம்’ல என் நடிப்பைப் பாராட்டினார். சந்தோஷப்பட்டார். நல்ல நண்பர்களா இருக்கோம். அருண் இப்ப ஸ்கிரிப்ட் ஒர்க்கில் இருக்கார். விரைவில் படம் பண்ணுவார். இப்ப நான் ‘அன்னபூரணி’ தவிர தமிழ்ல அடுத்து ஒரு படமும் கமிட் பண்ணியிருக்கேன். மலையாளத்துலேயும் ரெண்டு படங்கள் நடிச்சு முடிச்சுட்டேன்.”
லிஜோ மோல் பேட்டியின் வீடியோ வடிவில் காண: