புதுடில்லி: அமலாக்கத்துறை இயக்குனருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கிய மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்க, உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்புக்கொண்டது.
சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்களுக்கு ஓய்வு பெற்ற பின்னரும் ஐந்து ஆண்டுகள் வரை பதவி நீட்டிப்பு வழங்கும் சட்டத் திருத்தத்தை,மத்திய அரசு கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தியது.இதையடுத்து, கடந்த ஆண்டு நவ., 17ல் ஓய்வு பெற்ற அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய்குமார் மிஸ்ராவுக்கு, 2022 நவ., 18 வரை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து,வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ‘உயர் அதிகாரிகளின் பணி ஓய்வுக்கு பின், மிக அரிதான அல்லது தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டுமே பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்’ என, மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்புக்கொண்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement