டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.80.04 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஜூன் 22ல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு ரூ.78 ஆக இருந்தது. ஜூன் 22ம் தேதிக்கு பிறகு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு தொடர்ந்து படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது.