அரசு ஊழியர்கள் புன்னகையுடன் சேவை செய்யாவிட்டால் அபராதம்.. எந்த ஊரில் தெரியுமா?

பிலிப்பைன்ஸில் உள்ள முலோனேயில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஊழியர்களுக்கு ஒரு புதுவிதமான அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசால் வழங்கப்படும் சேவையின்போது ஊழியர்கள் மக்களுக்கு மகிழ்ச்சியாக புன்னகையுடன் சேவை செய்ய வேண்டும்.

அப்படி புன்னகையுடன் சேவை செய்யாவிட்டால் அதனை மீறும் ஊழியர்களுக்கு அபாரதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்க கையில் இருக்கும் ரூ.500 நோட்டு நல்ல நோட்டா..கள்ள நோட்டா.. எப்படி தெரிந்து கொள்வது?

அபராதம்

அபராதம்

இது குறித்து பிலிப்பைன்ஸின் மேயர் அரிஸ்டாடில் அகுயர் அரசாங்க ஊழியர்களை சேவை செய்யும்போது புன்னகையான முகத்துடன் சேவை செய்ய களையிட்டுள்ளார். அப்படி சேவை செய்யாவிடில் அபராதம் விதிக்கப்படும் அபாயம் உள்ளது.

பிலிப்பைன்ஸின் மேயர் அரசாங்கத்தால் வழங்கப்படும் சேவையின் அளவினை சீர்படுத்த முயற்சி செய்து வருகின்றார். இந்த நிலையில் தான் இப்படி அறிவிப்பினை கொடுத்துள்ளனர். இதன் மூலம் அரசு சேவைகளை சீர்படுத்த முடியும் என அந்த நாட்டு அரசு நினைக்கிறது.

நேர்மறையாக இருக்கணும்?

நேர்மறையாக இருக்கணும்?

லூசானின் பிராதான தீவில் உள்ள க்யூசான் மாகாணத்தில் உள்ள முலனாய் நகரத்தில் உள்ள கொள்கை, அமைதி மற்றும் நட்பான சூழ்நிலையை வெளிப்படுத்த வேண்டும். இது நேர்மையான சூழ்நிலையை உருவாக்கும் என்றும் அரிஸ்டாட்டில் அகுயர் கூறியுள்ளார்.

மோசமான நடவடிக்கை தான் காரணமா?
 

மோசமான நடவடிக்கை தான் காரணமா?

தென்னை விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உள்பட உள்ளூர் மக்கள் தங்கள் வரியை செலுத்தவோ அல்லது ஒரு பிரச்சனைக்கு உதவி பெறவோ சென்றபோது டவுன் ஹால் ஊழியர்களிடம் இருந்து, அவர்கள் மோசமாக நடத்தப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, இந்த புதிய அறிவிப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவ்வளவு அபராதம்?

இவ்வளவு அபராதம்?

நியூ ஸ்ட்ரெய்டில் டைம்ஸ் படி, தொழில் சார் பின்னணியைக் கொண்ட அகுய்ரே, எங்கள் அரசாங்க அணுகுமுறையை மாற்ற விரும்புகிறார். இந்த உத்தரவுக்கு இணங்காத ஊழியர்களுக்கு ஆறு மாத சம்பளத்திற்கு சமமான அபராதம் அல்லது வேலையில் இருந்தே கூட இடை நீக்கம் செய்யப்படலாம்.

இந்த ஸ்மைல் கொள்கையின் கண்கானிப்பை மனித வளக் குழு உறுதி செய்யும் என்று மேயர் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

என்ன இது நம்ம ஊரிலும் அமலுக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறதா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Philippines mayor fines civil servants if they don’t serve with a smile

Philippines mayor fines civil servants if they don’t serve with a smile/அரசு ஊழியர்கள் புன்னகையுடன் சேவை செய்யாவிட்டால் அபராதம்.. எந்த ஊரில் தெரியுமா?

Story first published: Thursday, July 14, 2022, 21:06 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.