ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவின் கேரளாவிற்கு வந்த நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் பெரும்பாலான பகுதிகளில் பரவி வந்த இந்தக் குரங்கம்மை காய்ச்சல், சமீபத்தில் காலத்தில் பிரித்தானிய ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 57 நாடுகளில் பரவத் தொடங்கியது.
இதையடுத்து குரங்கம்மை பாதிப்புகளை கட்டுப்படுத்த உலக நாடுகள் உரிய மற்றும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக சுகாதார மையம் தனது எச்சரிக்கை தெரிவித்தது.
இந்தநிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு வந்த நபர் ஒருவருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு அறிகுறிகள் காணப்பட்டதை தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது ரத்த மாதிரி புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு இருந்த நிலையில், அவருக்கு குரங்கம்மை பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நபர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 11 நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.