இலங்கையில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு…20ம் திகதி இலங்கை மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?


இலங்கையில் நாடளாவிய ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 5 மணி முதல் இந்த தடை சட்டம் தளர்த்தப்பட்டுள்ளன.

இலங்கையில் வெளிநாட்டு கையிருப்பு முற்றிலுமாக குறைந்து, உணவு, எரிவாயு மற்றும் மருந்துகள் ஆகியவற்றின் தட்டுப்பாடுகள் அதிகரித்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் ஆளும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

இந்த போராட்டத்தில் ஜனாதிபதி இல்லம் மற்றும் பிரதமர் இல்லம் என முக்கிய அரசு அதிகாரப்பூர்வ இடங்கள் ஆகியவை ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு, கைப்பற்றப்பட்டது.

இதனைத் அடுத்து இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க-வை நியமித்து விட்டு மாலைத் தீவில் தற்போது தஞ்சம் அடைந்துள்ளார்.

இதன்பின் போராட்டங்களை கட்டுப்படுத்த இலங்கையின் தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழன் (ஜூலை 14) காலை 5 மணி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் இலங்கை நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு இன்று காலை 5 மணியுடன் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு...20ம் திகதி இலங்கை மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? | Sri Lanka Curfew Has Been Lifted From5am Today

கூடுதல் செய்திகளுக்கு: கள்ளச் சந்தைக்கு கடத்தப்படும் உக்ரைன் ஆயுதங்கள்…ஐரோப்பிய யூனியனுக்கு பரவும் அபாயம்!

இலங்கை நாடாளுமன்றத்தில் ஜூலை 20 திகதி புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.