இவர் தான் புதிய MDH தாத்தா.. பாகிஸ்தானில் இருந்து வந்த தரம்பால் குலாட்டி..!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு 1947ஆம் ஆண்டு வந்த தரம்பால் குலாட்டி ஒரு சிறிய மசாலா கடையை ஆரம்பித்து இன்று அனைவரும் வியக்கும் வகையில் மிகப்பெரிய நிறுவனத்தை தோற்றுவித்தவர்.

இவரது கடினமான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக இன்று இவரது நிறுவனம் மசாலாப் பொருட்களின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்களில் ஒன்றாக உள்ளது.

இந்த வீட்டின் மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய்.. யாருடையது தெரியுமா..?

இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் தோன்றும் ஒரு முதியவர் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்ற நிலையில் தற்போது அவரது மறைவுக்கு பின் புதியவர் ஒருவர் விளம்பரங்களில் தோன்றுகிறார்.

MDH மசாலா

MDH மசாலா

MDH மசாலா பிராண்டின் உரிமையாளரான மஹாஷாய் தரம்பல் குலாட்டி தனது 98வது வயதில் காலமானார் என்ற செய்தி பலர் அறிந்ததே. இவர் ‘MDH மாமா’, ‘தாதாஜி’, ‘மசாலா கிங்’ மற்றும் ‘மசாலா மன்னன்’ என செல்லமாக அழைக்கப்பட்டார். மசாலா மன்னன் மகாஷாய் தரம்பால் குலாட்டி ஒரு சிறிய கடையில் மசாலா வியாபாரத்தை தொடங்கி பின்னர் தனது அயராத உழைப்பால் பெரிய பிராண்டாக மாற்றினார்.

உழைப்பு - அர்ப்பணிப்பு

உழைப்பு – அர்ப்பணிப்பு

இன்று MDH நிறுவனம் தரம்பால் குலாட்டியின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக பிராண்டட் மசாலாப் பொருட்களின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்களில் ஒன்றாக விளங்குகிறது.

சவால்
 

சவால்

தரம்பால் குலாட்டியின் மரணத்திற்குப் பிறகு, MDH பிராண்டின் பாரம்பரியத்தை பராமரிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. மேலும் பிராண்ட் விளம்பரங்களில் மஹாஷாய் குலாட்டிக்கு பதிலாக யார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.

புதிய விளம்பரம்,  புதிய நபர்

புதிய விளம்பரம், புதிய நபர்

இந்த நிலையில் MDH நிறுவனத்தின் விளம்பரங்களில் ஒரு புதிய முதியவர் தோன்றுகிறார், MDH மசாலாப் பொருட்களின் புதிய விளம்பரங்களில் வரும் இந்த நபர் யார் என்பதை அறிய பலர் ஆர்வத்துடன் இருப்பார்கள். புதிய MDH மாமா வேறு யாருமல்ல, MDH மசாலாப் பொருட்களின் புதிய விளம்பரத்தில் தோன்றியவர் தரம்பால் குலாட்டியின் மகன் ராஜீவ் குலாட்டிதான்.

ஏற்றுமதி

ஏற்றுமதி

தரம்பால் குலாட்டியின் மரணத்திற்குப் பிறகு, MDH நிறுவனத்தை அவரது மகன் ராஜீவ் குலாட்டி நிர்வகித்து வருகிறார். இந்நிறுவனம் தற்போது அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, யுனைடெட் கிங்டம், தென்கிழக்கு ஆசியா, ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

வேறு நிறுவனத்திற்கு விற்பனையா?

வேறு நிறுவனத்திற்கு விற்பனையா?

முன்னணி மசாலா தயாரிப்பு நிறுவனமான MDH லிமிடெட், FMCG தயாரிப்பாளரான HUL க்கு தனது வணிகத்தை விற்பனை செய்ய போவதாக செய்திகள் வெளியானதை MDH மறுத்துள்ளது. இதுபோன்ற செய்திகள் முற்றிலும் பொய்யானது மற்றும் ஆதாரமற்றது என்று MDH தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

MDH நிறுவனத்தை தோற்றுவித்த தரம்பால் குலாட்டி 1927ஆம் ஆண்டு பாகிஸ்தானின் சியால்கோட்டில் பிறந்தார். அவரது தந்தை 1919 இல் சியால்கோட்டில் மசாலாப் பொருட்களின் சிறு வணிகத்தைத் தொடங்கினார். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய குலாட்டி தனது தந்தை மஹாஷாய் சுன்னிலால் குலாட்டியுடன் சியால்கோட்டில் உள்ள சிறிய மசாலாக் கடையில் சேர்ந்தார். 1947ஆம் ஆண்டில், குலாட்டி தன்னிடம் இருந்த வெறும் 1,500 ரூபாயுடன் இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவில் அவர் சின்னச்சின்ன வேலைகளை செய்து வாழ்க்கையை நடத்தினார்.

டெல்லியில் கடை

டெல்லியில் கடை

பின்னர் அவர் டெல்லியில் உள்ள கரோல்பாக்கில் ஒரு கடையை ஆரம்பித்தார். MDH என்ற பெயரில் அவரது குடும்பம் சியால்கோட்டில் வணிகம் நடத்தி வந்த நிலையில் அதே பெயரில் தான் டெல்லியிலும் அவர் கடையை தொடங்கினார். அதன்பின்னர் 1959ஆம் ஆண்டு ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட MDH, இந்தியாவின் மிகப்பெரிய மசாலா பிராண்டுகளில் ஒன்றாக மாறியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Who is Rajiv Gulati who replaced Dharmpal Gulati in MDH advertisement

Who is the ‘new grandfather’ appearing in MDH Spices’ ad? | இவர் தான் புதிய MDH தாத்தா.. பாகிஸ்தானில் இருந்து வந்த தரம்பால் குலாட்டி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.