இஸ்லாமாபாத்,
146 நாடுகளில் பாலின இடைவெளி அதிகமில்லாத முதல் 5 நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து, சுவீடன் ஆகியவை இடம் பிடித்துள்ளன.மிக மோசமான பாலின இடைவெளி உள்ள 5 நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் தலீபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தான் உள்ளது.
பாகிஸ்தான் இரண்டாவது இடம் வகிக்கிறது. அடுத்த இடங்களை காங்கோ, ஈரான், சாத் பிடித்துள்ளன.தற்போது பாலின இடைவெளியின் அதிகபட்ச அளவு 68.1 சதவீதமாக உள்ளது.இந்த இடைவெளி நீங்கி ஆண், பெண் பாலின சம நிலை அடைய 132 ஆண்டுகள் ஆகும்.
5 சதவீதத்துக்கும் அதிகமான பாலின இடைவெளி உள்ள நாடுகளில் முதல் இடத்தில் பாகிஸ்தானும், அதைத் தொடர்ந்து கத்தார், அசர்பைஜான், சீனா, இந்தியா ஆகியவையும் உள்ளன. உலக அளவிலான பாலின இடைவெளியில் நமது பிராந்தியத்தில் வங்காளதேசம் உலகளவில் 71-வது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த நிலைகளில் நேபாளம், இலங்கை, மாலத்தீவு, பூடான், இந்தியா, ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளன. உலகளவில் பாலின இடைவெளியில் இந்தியா 135-வது இடத்தில் உள்ளது.