இந்தியா சீனா இடையேயான மோதல் போக்கானது, கடந்த 2020ம் ஆண்டில் கல்வான் பள்ளதாக்கில் ஏற்பட்ட தாக்குதலுக்கு பிறகு, மிக கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. சீன பொருட்கள் வேண்டாம். #boycottchina என்ற கோஷங்கள் பரவலாக காணப்பட்டன.
ஆனால் இன்று தலை கீழாய் மாறிவிட்டது எனலாம். ஆதாரங்களின் இந்தியா இடையேயான வர்த்தகர்த்தில் பெரியளவில் ஏதும் தாக்கம் இல்லை.
மாறாக வழக்கத்திற்கு மாறாக வளர்ச்சியினையே கண்டுள்ளன. கடந்த் 2021ம் ஆண்டில் 125 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு சாதனை அளவினை எட்டியுள்ளன.
இலங்கையை அடுத்து கலவர பூமியான சீனா: மக்கள் தெருவில் இறங்கி போராட இதுதான் காரணம்!
சாதனை லெவல்
இதே சாதனை வளர்ச்சியினையே நடப்பு ஆண்டிலும் எட்டலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். 2022ம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவுக்கும் இடையிலான வணிகம் 67.08 பில்லியன் டாலராகும். சீனா ஏற்றுமதிகள் முக்கிய பங்கு வகித்துள்ளன.
முதல் முதலாக நடந்த தரமான சம்பவம்
இந்த இரு தரப்பிற்கு இடையேயான வர்த்தகம் முதன் முறையாக 100 பில்லியன் டாலர்களை கடந்த 2021ம் ஆண்டில் தாண்டியது. இது நடப்பு ஆண்டிலும் 100 பில்லியன் டாலர்களுக்கு மேலாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புறக்கணியுங்கள்
சீனா இந்தியா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் CAIT 450-க்கும் மேற்பட்ட வகைகளில், 3000-க்கும் மேற்ற்பட்ட பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால் இந்த புறக்கணிப்பு அழைப்புகள் எதுவும் இரு தரப்பு வணிகத்தினையும் அவ்வளவாக பாதிக்கவில்லை என்றே கூறலாம். மாறாக வழக்கத்திற்கு மாறாக முதன் முறையாக 100 பில்லியன் டாலர்களுக்கு மேலாக வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சீனாவினை நம்பியிருப்பதை குறைக்கலாம்
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு, சீன இறக்குமதியினை இந்தியா நம்பியிருக்கும் நிலையில், அதனை புறக்கணிப்பது கடினம். ஆனால் சீனாவினையே முழுக்க சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
எவ்வளவு ஏற்றுமதி தெரியுமா?
கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சீனாவின் ஏற்றுமதி செய்ததன் மதிப்பு 46.2% அதிகரித்து, 97.52 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இதே இந்தியாவின் ஏற்றுமதி சீனாவுக்கு 34.2% அதிகரித்து, 28.14 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட வர்த்தகபற்றாக்குறை விகிதமானது 2021ல் 69.38 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி?
மே மாதம் சீனா தனது புள்ளி விவரங்களின் 2021 – 2022 இந்தியா தனது மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருப்பதாக கூறியது.
மொத்தத்தின் சீனா வேண்டாம் என்ற புறக்கணிப்பானது புறக்கணிக்கப்பட்டு விட்டது.
NO boycott? India – china’ trade between in the first half of 2022 stood at $67.08 billion
NO boycott? India – china’ trade between in the first half of 2022 stood at $67.08 billion/எல்லாம் தலைகீழாய் மாறிப்போச்சு.. சீனா வேண்டாம் என ஒதுக்கியவர்கள் செய்த வேலையை பாருங்க?